தலித் அமைப்புகள் 21ம் தேதி ஆர்ப்பாட்டம்


விழுப்புரம்:பரமக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் குறித்து தலித்
அமைப்புகளின் ஆலோசனை கூட்டம் விழுப்புரத்தில் நடந்தது.விழுப்புரம் சுற்றுலா
மாளிகையில் நடந்த கூட்டத்திற்கு எஸ்.சி.,-எஸ். டி., கூட்டமைப்பு தலைவர்
அறிவாசகம் தலைமை தாங்கினார். பகுஜன் சமாஜ் மாநில பொதுச்செயலாளர் விஜயன்
சிறப்புரை நிகழ்த்தினார்.
பரமக்குடியில் தலித் மக்கள் மீது நடத்திய துப்பாக்கி சூடு சம்பவத்தை
கண்டிப்பது, சம்பவத்தில் தொடர்புடைய உயர் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க
வேண்டும்.
இதில் இறந்தவர்களின் குடும்பத்திற்கு 10 லட்சம் ரூபாய், பலத்த
காயமடைந்தவர்களுக்கு 5 லட்சம் ரூபாயும் நஷ்ட ஈடு வழங்க வேண்டும் உள்ளிட்ட
தீர்மானங்கள் நிறைவேற்றினர்.இந்த தீர்மானங்களை வலியுறுத்தி வரும் 21ம் தேதி
விழுப்புரம் கலெக்டர் அலுவலகம் முன் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு
செய்யப்பட்டது.
கூட்டத்தில், மக்கள் குடியரசு கட்சி தலைவர் திருவள்ளுவர், சமுக நீதி பேரவை
நிறுவனர் கவுதமன், இந்திய குடியரசு கட்சி சம்பத்குமார் முன்னிலை வகித்தனர்.
பகுஜன் சமாஜ் கட்சி மாவட்ட தலைவர் ராமமூர்த்தி, நிர்வாகிகள் சக்கரை,
கலைவேந்தன், பெருமாள், துரைக்கண்ணு உட்பட பலர் கலந்து கொண்டனர்.