திருவாரூர் அருகே தலித் சமூகத்தைச் சேர்ந்தவரைத் தாக்கிய ஊராட்சி மன்றத் தலைவர் ராஜேந்திரன் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
திருவாரூர் மாவட்டம் கொரடாச்சேரி கிராமத்தில் ஊராட்சி மன்றத் தலைவர் ராஜேந்திரன், தேர்தல் பகை காரணமாக தமிழ் அழகன் என்பவரைத் தாக்கியுள்ளார்.
இதுகுறித்து காவல்துறையி;டம்; புகார் அளிக்கப்பட்டது. அப்போது சாதாரண வழக்கில் ராஜேந்திரன் மீது வழக்குப் பதிவு செய்துள்ளதாகவும், அவர் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்ய வேண்டுமென்றும் விடுதலைச்சிறுத்தைகள் கட்சியினர் வலியுறுத்தினர்.
இதற்காக குடவாசல் வருவாய் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டனர்.
அப்போது தமிழ் அழகனைத் தாக்கிய ஊராட்சி மன்றத் தலைவர் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்ய வேண்டுமென முழக்கங்கள் எழுப்பினர்.