சாதி, சமயம் குறிப்பிடாமல் பள்ளிகளில் சேர்க்க முடியும்!

எமது தோழர்கள் அவர்களது குழந்தைகளை பள்ளியில் சாதி, மதமற்றோர் என்று சேர்க்கும் போது அநேக பள்ளி நிர்வாகங்கள் – அரசு பள்ளிகளையும் உள்ளிட்டு – மறுத்து விடுவது வழக்கம். பின்னர் தோழர்கள் அப்படிச் சேர்க்க முடியுமென்ற அரசாணையை நகலெடுத்து நிர்வாகத்தினருக்கு எடுத்துச் சொல்லி சேர்ப்பது வழக்கம். இது போக தோழர்கள் கைதாகி காவல் நிலையத்திற்கோ, சிறைக்கோ செல்லும் போதும் சாதி குறிப்பிடச் சொல்லி அதிகாரிகள் மிரட்டுவது வழக்கம். அங்கேயும் ஒவ்வொரு முறையும் போராட்டத்தின் மூலமே சாதி அடையாளங்களை மறுத்து தமது விவரங்களை தோழர்கள் பதிவிடுகிறார்கள்.
பள்ளிகளில் சேரும் போது மட்டுமல்ல, பள்ளிச் சான்றிதழ், இடமாற்ற சான்றிதழ் ஆகியவற்றிலும் சாதி, மதம் இல்லை என்றோ, வெற்றிடமாக விட்டோ தர இயலும். இதற்க்காக அரசு வெளியிட்டுள்ள ஆணையை இங்கு படமாகவும்,  பிடிஎஃப் கோப்பாகவும் இணைத்திருக்கிறோம். தோழர்கள், நண்பர்கள் பயன்படுத்திக் கொள்ளலாம்.