கோவிலினுள் சென்ற தலித் மக்கள்


தமிழக ஊதாபுரம் பகுதியில் உள்ள தலித் இன மக்கள், இரண்டு தசாப்தங்களின் பின்னர், நேற்றைய தினம் ஊர் ஆலயத்துக்குள் சென்றுள்ளனர்.
 
தலித் இன மக்களை ஊர் ஆலயத்தினுள் செல்லக் கூடாது என உயர்ந்த வகுப்பு இனத்தவர்கள் என கூறிக் கொள்பவர்கள் தடை விதித்து வந்தனர்.
 
அவர்கள் இறுதியாக கடந்த 1989ம் ஆண்டு இந்த ஆலயத்தினுள் சென்றதாக, அவர்களின் தலைவர் பொன்னையா தெரிவித்துள்ளார்.
 
அதன் பின்னர் உயர்ந்த வகுப்பு இனத்தவர்களால், தலித் இன மக்கள் கோவிலினுள் செல்வதற்கு தடை விதிக்கப்பட்டு வந்தது.
 
எனினும் நேற்றுடன் அந்த தடை மீறப்பட்டுள்ளது.
 
அவர்கள் கோவிலினுள் சென்று வழிபடுவதற்கு காவற்துறையினர் பாதுகாப்பு வழங்கியுள்ளனர்.
 
எவ்வாறியனும், உயர்ந்த வகுப்பு இனத்தவர்கள் என கூறிக் கொள்பவர்கள், தலித் மக்கள் கோவிலினுள் புதுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, கோவிலுக்கு வெளியில் ஆர்ப்பாட்டங்களை நடத்தி வந்தனர்.