வன் கொடுமைக்கு ஆளான தலித் நீதிபதி
சில அதிமேதாவிகள் சாதி அடிப்படையில இட ஒதுக்கீடு கூடாது, தலித் எல்லாம் முன்னேறிட்டாய்ங்க -பொருளாதார அடிப்படையில ஒதுக்கீடு தரனும் -மகளிர் ஒதுக்கீடுங்கற பேர்ல எங்க சாதி பெண்கள் தலித் ஒதுக்கீட்டுக்கு ஆப்படிக்கனும்னு மாய்மாலம் பண்ராய்ங்க.
நம்மளோட ஃபேமஸ் பஞ்ச் ஒன்னிருக்கு " ஒரு தலித் என்னவா வேணம்னா ஆகட்டும் உசரட்டும்.. ஆனா உயர்சாதியினர் பார்வையில அவன் தலித் தலித்துதேன்"
பாருங்க ஒரு நீதிபதிக்கே வன் கொடுமை நடந்திருக்கு. அவரு தேசிய எஸ்.சி.கமிஷனுக்கு புகார் அனுப்பியிருக்காரு. சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி கர்ணன் கடலூர் மாவட்டத்தை சேர்ந்தவர். அவர் தனக்கு நிகழந்த கசப்பான அனுபவங்களை எஸ்.சி கமிஷனுக்கு அனுப்பியிருக்காரு.
ஆனா அவர் தன் புகார்ல எங்கேயும் நான் தலித் என்ற காரணத்தால் இந்த கொடுமைகள் நடந்ததுன்னு குறிப்பிடலை. சீமான்யா !
அவர் தனக்கு நடந்த அவமானங்களா சொல்லியிருக்கிற விசயங்க:
1.சொந்த மாவட்டத்துல நடக்கிற நிகழ்ச்சிகளுக்கு கூட என்னை கூப்பிடறதில்லை
2.முக்கியமான கேஸுங்க எதுலயும் என்னை பெஞ்ச்ல சேர்க்கிறதில்லை.
3.ஒரு நிகழ்ச்சியில எனக்கு ஏற்பாடு செய்யப்பட்ட சேர்ல இருந்த என் பேர் அச்சிடப்பட்ட காகிதத்தை ஒரு நீதிபதி பிடுங்கி கீழே போட்டு மிதிச்சாரு.
4.ஒரு திருமண நிகழ்ச்சியில பக்கத்துல உட்கார்ந்திருந்த நீதிபதி வேணம்னே கால் மேல கால் போட்டு தன்னோட ஷூவை என் மேல உரசினாரு.
5.இன்னொரு நிகழ்ச்சியில என் சேருக்கு பின்னாடி உட்கார்ந்திருந்த நீதிபதியோட சகோதரர் ஒருத்தர் என் சேரை பிடிச்சு ஆட்டிக்கிட்டே இருந்தாரு.
இந்த புகாரை பெற்றுக்கொண்ட எஸ்.சி.கமிஷன் தலைவர் இந்த புகாரை சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதிக்கு அனுப்பியிருக்காரு.
பார்ப்போம் நீதிபதிக்காவது நீதி கிடைக்குதான்னு..