பட்டியல் சாதியிலிருந்தே நீக்குக!!


சாதி கிருமியால் மிக அதிகமாக தாக்கப்பட்டு
தலித்துகளுக் கெல்லாம் தலித்துகளாக
அடிமூட்டைகளிலும் அடிமூட்டைகளாக நசுக்கப்பட்டு
உயிருக்குப் போராடும் நம் அருந்ததிய மக்களுக்கு
 
ஏற்பட்ட பேராபத்தை அறிந்து அவசர சிகிச்சை பிரிவில் 
அனுமதி வேண்டி சமூகவியலாரின் ஒருமித்த ஆதரவை பெற்று
அண்ணன் அதியமான் தலைமையிலே ஊர்கூடி போராடி
பெற்ற உள் ஒதுக்கீடாம் பிராணவாயு
ஆக்சிஜனை அளிக்கும் சிலிண்டரினை தகர்த்தெறிந்து
 
படுத்த படுக்கையிலே கிடக்கும் நம்மை
பரலோகம்  அனுப்பிவிட்டு, மொத்த பங்கை  தனதாக்கி 
ஏப்பமிட எத்தனிக்கும் இந்த வீணர்களை வீழ்த்திடுவோம்
ஓரணியில் திரண்டு வாருங்கள் எம் அருந்ததிய வீரர்களே!!!
 
இட ஒதுக்கீட்டின் வாசனையைக் கூட நுகர விடாமல்
மேலிருக்கும் மற்ற இரண்டு சாதிகளால் விரட்டி
அடிக்கப்படுகின்ற அருந்ததிய மக்களின் அவலத்தை
அறிவார்ந்த புள்ளி விவர கணக்குகளே  
 
தோலுரித்து வெளிச்சம் போட்டு காட்டியும் கண்ணைக் கட்டிக்கொண்டு
உள் ஒதுக்கீட்டை எதிர்த்து போராடும் கிருஷ்ணனுக்கு
தங்கள் உள் சாதி மேலாதிக்கத்தை நம் மீது நிலை நிறுத்த
நாம் அவர்களுக்கு இணையாக ஒருபோதும் வந்துவிடக்கூடாதாம் !!!
 
மீண்டும் ஒருமுறை நம் பங்கு பறிபோவதற்கு முன்பு 
உள் ஆதிக்கம் செலுத்த துடிக்கும், முன்னேறிய இவர்களை
பட்டியல் சாதியிலிருந்தே நீக்கவேண்டுமென
நாம் பட்டினி போராட்டத்தை உடனடியாக தொடங்கவேண்டும்!!!
 
-செல்வா
  
அருந்ததியர் விடுதலையே அனைவருக்கும் விடுதலை
  - இரா. அதியமான், நிறுவனத்தலைவர், ஆதித்தமிழர் பேரவை.