கல்லடி கலாட்டா, தீவிரவாதம், கலவரம்: வடக்கு-காஷ்மீர் முதல் தெற்கு-ராமநாதபுரம் வரை!

“செப்டம்பர் 11” என்று உலகத்தவர் அனைவரும் ஜிஹாதி தீவிரவாதத்தை எதிர்த்து நினைவு தினமாக கடைப்பிடிக்கும் நேரத்தில், தமிழகத்தில் வேறுவிதமான தீவிரவாதம் தலையெடுத்துள்ளது. “தலித்துகள் கல்லடி கலாட்டாவில் துப்பாக்கிச் சூட்டில் மூவர் பலி”, இப்படி ஆங்கில ஊடகங்கள் செய்திகளை வெளியிட்டுள்ளன (IBNLive.com). போலீஸார் துப்பாக்கிச் சூட்டில் மூவர் மரணம் என்று NDTV.com சொல்கிறது[2]. ஆக உலக ஊடகங்களுக்கு அவல் கிடைத்து விட்டது, இனி மெல்ல ஆரம்பித்து விடுவார்கள்[3]. தலித்துகள் கொலை, தலித் கிருத்துவர்கள் கொலை என்று விவாதிக்க ஆரம்பித்து விடுவார்கள். மனித உரிமைகள் என்று, பல இயக்கங்கள் கிளம்பி விடும். தமிழகத்தில் சாதி பிரச்சினையை மதப்பிரச்சினையாக்குவதையும், மதப்பிரச்சினையை சாதிப் பிரச்சினையாக்குவதிலும் சில குழுக்கள் தயாராகவே இருக்கிறார்கள். சாதி இல்லை என்று தம்பட்டம் அடித்துக் கொண்டு, சாதிப்பிரச்சினையை எழுப்புவதில் அவர்கள் வல்லவர்கள். காஷ்மீரைப் போலவே இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு பணம் கொடுக்க ஏற்பாடு செய்தாகி விட்டது.