தலித் விடுதலை பேரவை கூட்டம்

புதுச்சேரி: புதுச்சேரி தலித் விடுதலை பேரவையின் அறிமுக கூட்டம் மதகடிப்பட்டில் நடந்தது. முரளி தலைமை தாங்கினார். பேரவை தலைவர் அருள்தாஸ் சிறப்புரையாற்றினர். கூட்டத்தில் மதகடிப்பட்டு தலைவராக கமல்நாதன், செயலாளர் அருண்ராஜ், பொருளாளர் முகிலன், துணைத் தலைவர் ராஜேந்திரன், துணை செயலாளர் மதி மற்றும் 15 செயற்குழு உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டனர். மண்ணடிப்பட்டு தொகுதி புதிய தலைவராக முரளி தேர்ந்தெடுக்கப்பட்டார். கூட்டத்தில் மதகடிப்பட்டு காலனியில் பொது தொலைக்காட்சி, கழிப்பறை வசதி, கால்வாய், கிளை நூலகம் ஏற்படுத்தி தர வேண்டும். மதகடிப்பட்டு பள்ளிக்கூடம் அருகில் உள்ள மதுகடை அப்புறப்படுத்த வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. கூட்டத்தில் மாநில அமைப்பு செயலாளர் நாகராஜன், அரசியல் குழு தலைவர் முத்துக்கிருஷ்ணன், மாநில செயலாளர்கள் வீரகோபாலன், கண்ணப்பன், மாணவர் அணி செயலாளர் பொன்னிவேல், ஊசுடு தொகுதி செயலாளர் வாழ்முனி உள்பட பலர் கலந்து கொண்டனர்.