3% இடஒதுக்கீடு கேட்டு அருந்ததியர் இன மக்கள் உண்ணாவிரத போராட்டம்

காரைக்கால்: தமிழகத்தைபோல் புதுச்சேரி மாநிலத்தில் அருந்ததியர் இன மக்களுக்கு 3 சதவிகிதம் இட ஒதுக்கீடு வழங்க வலியுறுத்தி, காரைக்கால் மாவட்ட அருந்ததியர் இன மக்கள் ஒருநாள் அடையாள உண்ணாவிரத போராட்டம் நடத்தினர்.
நேற்று கலெக்டர் அலுவலகம் அருகில் நடந்த உண்ணாவிரதத்திற்கு, மாநில தலைவர் வாழ்முனி தலைமை வகித்தார். செய லர் தவமணி முன்னிலை வகித்தார். மாநில துணை பொதுச்செயலர் பரமசிவம், துணைத்தலைவர் ஆறுமு கம், காரைக்கால் மாவட்ட தலைவர் கலியமூர்த்தி, செயலர் நாகராஜ், ஆதித்தமிழர் பேரவை பொதுச்செயலர் நாகராசன் மற்றும் பலர் பேசினர்.
புதுவை மாநில துணை பொதுச் செயலர் பரமசிவம் பேசுகையில், தமிழகத்தைபோல், புதுச்சேரியில் வாழும் அருந்ததியர் இன மக்களுக்கும் 3 சதவிகிதம் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும். தமிழகத்தை போல், அருந்ததியர் என்று சாதி சான்றிதழ் வழங்கவேண்டும். 1989ம்ஆண்டு முதல் நிறுத்தப்பட்ட காலணி தைக்கும் பங்க் கடைகளை மீண்டும் வழங்க வேண்டும். அடிக்கடி பங்க் கடைகளை அரசு இட மாற்றம் செய்ய உத்தரவிடக்கூடாது. தமிழகத்தைபோல், பங்க் கடைகளுக்கு இலவச மின்சாரம் வழங்கவேண் டும். 2011 சட்டமன்ற தேர்த லின் போது, அருந்ததியர் இன மக்களுக்கு உரிய இட ஒதுக்கீட்டை வழங்குவோம் என வாக்குறுதி அளித்த புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி அருந்ததியருக்கான இட ஒதுக்கீட்டை உடனே வழங்க வேண்டும் என வலியுறுத்தி பேசினார்.