தலித் குரு பூசைக்குத் தடை! 7 Daliths shot dead like pigs! Govt. Communallism?

அம்மையார் ஆட்சியின் அராஜகம்! குரு பூசையைத் தடை செய்து, பக்தர்களைப் பன்றிகளைப்போல் சுட்டுக் கொல்லும் கொடூரம்!

ஐயாயிரம் ஆண்டுகாலமாக இருந்த சாதி வெறி விடுதலைக்குப் பிறகு சவாலுக்கு உள்ளாhனது. கொடுமைக்காட்பட்டிருந்த முட்டாhள் மக்கள் சுயமரியாதை பெறக்காரணம் பாதிரிமார் கொடுத்த கல்வியும், விடுதலைப்போராட்ட வீரர்கள் விடுதலைக்குப் பிறகு பட்டிக்காடுகள் வரை கொடுத்த கல்வியும், கிருத்துவ மதம் போதித்த, வள்ளுவம், பௌத்தம், ஜைனம் போதித்த-பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்ற தத்துவமும் அவர்களின் தன்மானத்தைத் தூண்டியது.
முதுகுளத்தூர்ப் பகுதியில் கீழத்தூவல் என்ற கிராமத்து தலித்துக்களுக்கெதிரான தீண்டாமைக் கொடுமைக்கு எதிராக அந்தப்பகுதியில் ஆசிரியராகப்பணியாற்றிய இம்மானுவேல் சேகர் மக்களைத் திரட்டினார். கோயில் நுழைவுப்போராட்டம் நடத்தினர். இதையறிந்த முத்துராமலிங்கத் தேவர் தூண்டுதலின் பேரில் பள்ளர் (பள்ள நிலங்களில் சேற்றில் சகதியில் பணிபுரிவோர் என்று பொருள்-பிராமணர்கள் போல் தட்டுப் பிச்சை எடுப்பவர்கள் அல்லர்.) இம்மானுவேலை கள்ளர்கள் பரமக்குடியில் பகிரங்கமாக வெட்டிக் கொன்றனர். அது சாதிக்கலவரத்தைத் தூண்டியது. தீண்டாமை எதிர்ப்பில் முன்னின்ற காங்கிரஸ் பேரியக்கத்தின் மெய்யான தொண்டர் காமராசர் அஞ்சாது வோட்டுப் பொறுக்குவதைப் பற்றி சிந்திக்காது, கட்டளையிட்டதின் பேரில், ரே என்ற ஆங்கிலோ இந்திய காவல் ஆய்வாளர், சாதித் தகராறில் முன்னின்று கருவிகளாகப் பயன்பட்ட கொலைகாரர்கள் சிலரைப் பிடித்துக் கட்டிவைத்துச் சுட்டுத் தள்ளினார் என்பது வரலாறு. அது “அவர்கள் தாக்கினர்; திருப்பித் தாக்கினோம். அவர்கள் செத்தார்கள்” என்று எதிர்த்தாக்குதல் (நnஉடிரவேநச) சாவுகளாக முடிக்கப்பட்டன. நீதித்துறை வந்து விசாரித்தாலும் காவலரை இன்றும் ஒன்றும் செய்ய சட்டத்தில் இடமில்லை. காவலர்கள் சமுதாயத்தைக்காக்க செய்யும் ஆபத்தான, ஆனால் புனிதமான பணி அது.
அது முதல் காமராசரைக் கண்டபடி வைதார் சாதித் தலைவர் முத்துராமலிங்கர். அவரைத் தேவர் பட்டம் போட்டு அழைக்க என் பேனா தயாராக இல்லை. கொலைகாரன் தேவனாக முடியாது. மனிதன்தான். பெரும் சொத்துக்கு அவர் அதிபதி. அவர் சுபாஷ்சந்திர போசின் வாரிசு போல் அடையாளம் காட்டிக் கொண்டாலும், அவருக்கு மதுரைப் பகுதியில் மலையளவு சிலைகள் வைத்தாலும், அவர் ஒரு சாதித்தலைவரே. அவரது சாதியினர் மட்டுமே அவரைக் கொண்டாடுகிறார்கள். அவர் எப்படி குரு ஆனார் என்று தெரியாது. மதுரை வீரனைப் போல் பொன்னர் சங்கர் போல் அவர் ஒன்றும் உயிர்த்தியாகம் செய்தவரல்லர். ஆனால் இம்மானுவேல் தலித் மக்களுக்காக உயிர்த்தியாகம் செய்தவர். தேவர்கள் என்று சொல்லப்படும் முக்குலத்தோருள்ளும் முத்துராமலிங்கர் செய்த அக்கிரமங்களைக் கண்டிப்போரும் சாதி வெறியை எதிர்ப்போரும் ஏராளமாக உண்டு. உயிருக்கும் ஓட்டுக்கும் பயந்து அரசியலில் உள்ள முக்குலத்து முற்போக்கு சமத்துவச் சிந்தனையாளர் அதிகம் வாய் திறப்பதில்லை.
போராடி உயிர் நீத்து தியாகம் செய்தவர் இம்மானுவேல் சேகரன் என்ற ஆசிரியர். இவரது மூதாதையர்கள் இந்துப் பள்ளர்களே. இந்துமதச்சாதிக் கொடுமைகளை படித்தவர்கள் சுதந்திர இந்தியாவில் எதிர்க்கத் துவங்கினர். தெய்வத்துள் ஒருவராக மதிக்கப்படும் இம்மானுவேலருக்கு நேற்று 11.09.2011 அன்று பரமக்குடியில் குருபூசை நடத்தக் கூடினர் தலித் மக்கள். தலித் வீரன் மதுரை வீரன் செய்த நற்காரியத்துக்காகக் கள்ளரை வெட்டிச் சாய்த்துக் கொள்ளை அடிப்பதை நிறுத்திய தியாகிக்கு கொங்கு நாடு முழுதும் அனைத்துச் சாதியும் தங்கள் குலதெய்வங் களோடு வைத்துப் பூசைகள் செய்வது போல் இதுவும் நடக்கிறது. அருந்ததிய மக்கள் வீரனுக்கென்று தனிக் கோயிலே கட்டி தெய்வமாக வணங்குகிறார்கள்.
எனவே, இம்மானுவேலுவிற்கு கோயில் கட்டி குருபூசை செய்வதில் எந்தத்தவறும் இல்லை. ஜான் பாண்டியன் சாதி வெறியன் என்பதில் ஐயமில்லை. ஆனால் முத்துராமலிங்கத்தின் அடிபற்றிகளின் சாதி வெறியில் பாதி கூட ஜான் பாண்டியனுக்குக் கிடையாது. முத்துராமலிங்கம் என்ற ஒரு சாதி வெறியனுக்கு குரு பூசை நடத்த சகல அனுமதியும் தந்த ஆளும் கட்சி அமைச்சர்களும் கலந்து கொள்ளும் போது, எம்ஜியார் மேல் வெறிகொண்டு அவருக்க்hக வாக்களித்து வந்த பள்ளர்களின் தியாக புருஷன் இம்மானுவேல் சேகருக்குக் குரு பூசை நடத்த ஏன் தடை விதிக்க வேண்டும்? இது என்ன மதச்சார்பற்ற சாதி சார்பற்ற அரசா? சாதி வெறியரின் அரசா?
நிராயுதபாணிகளைச் சுட்டுக் கொல்வதுதான் சட்டம் ஒழுங்கைப்பராமரிப்பதா?
இவர்கள் தடைவிதித்தாலும் ஆயுதமின்றி மீறிக் கூடியதில் என்ன தவறு? டெல்லியில் தடைவிதித்து அண்ணா ஹஜாரேவைக் கைது செய்த பிறகு கடல் மடையென மக்கள் திரண்ட போது சுட்டுத் தள்ளினீர்களா? அப்போது சட்டம் ஒழுங்கு என்னானது? ஓகோ.... அங்கே நடந்தது ஷீலா தீக்சித் ஆட்சி. ஜெயாவின் ஆட்சியல்லவே! என் முட்டாள்த்தனத்துக்காக நானே என் தலையில் செருப்பால் அடித்துக் கொள்ள வேண்டியதுதான். நிராயுதபாணிகளாக காந்திவாதிகள் போல் கூடிய பாரமர மக்களைத் தடியால் அடித்தால் அவர்கள் கல் கொண்டு எறிவது ஆச்சரியமில்லை. அவர்களை அடிக்கவும் சுடவும் சாக்குப் போக்கு வேண்டுமல்லவா? எனவே காவலர்களே-தலித்துக்களுக்கு எதிரான சூத்திர சாதி வெறியர்களை வைத்துக் கல்வீசத் செத்ததாகவும், வண்டிகளைச் சேதப்படுத்தியதாகவும் எனக்கு ஒரு புலனாய்வுச் செய்தி வருகிறது. 7 இளைஞர்களைப் பன்றிகளைப்போல் குருவிகளைப்போல் சுட்டுத் தள்ளியதற்கு அம்மையார் மக்களிடம் பதில் சொல்லியே ஆக வேண்டும். இனியாவது அம்மையின் புகழ் பாடுவதை டாக்டர் கிருஷ்ணசாமி நிறுத்துவாரா? யதுதருமமா?யதுதருமமா?