திராவிடநாடு எதற்காக மனிதமலத்தை அள்ள ஊக்குவிக்கிறது?


ஆங்கிலேய அடிவருடிகளகவே இருக்கும் திராவிட சித்தாந்திகள்: திராவிட சித்தாந்திகள், விற்பன்னர்கள், முனைவர்கள், பிரகஸ்பதிகள், குருக்கள் முதலியவர்கள் சமநீதி என்றெல்லாம் மேடைகளில் வாய்கிழிய பேசி 60 ஆண்டுகளாக தமிழகத்தை ஆண்டு வந்துள்ளனர். 1960களில் அம்பேத்கார் என்றல் யார் என்று கூட தெரியாத இந்த கூட்டங்கள், பிறகு அம்பேத்கர் பெயரை வைத்துக் கொண்டு அரசியல் வியாபாரம் செய்ய ஆரம்பித்தன. ஆனால், கொள்கை அளவில் கூட அம்பேதகரைப் பின்பற்றாத இக்கூட்டங்கள், சட்டரீதியில் கூட மனித மலத்தை அள்ளும் கொடிய நிலையை மாற்ற முன்வரவில்லை. ஆங்கிலேய அடிவருடிகள் என்று முன்பு, இந்த திராவிடக் கூட்டாத்தாரை சொல்லியதுண்டு. ஆனால், அது உண்மைதான் என்று சுதந்திரம் பெற்ற பின்னரும், திராவிட சித்தாந்திகள் கடைபிடித்து வருகின்றனர்.


திராவிடத்தலைவரின் அணுகுமுறை: ஆகஸ்ட் 2008ல், திருமதி சௌத்ரி என்ற தேசிய சபாயி கர்மச்சாரிகளுக்கான கமிஷனின் தலைவர் (Ms. Chowdhary, Chairperson of National Commission for Safai Karamcharis) சென்னைக்கு வந்திருந்தபோது, தமிழ்நாடு, இன்னும் இந்த அவலநிலையை அழிக்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லையே என்று வருத்தப்பட்டார்[1]. அப்பொழுது கருணாநிதிக்கு போபம் வந்து, வழக்கம் போல அம்மையால் விவரங்களை அறியாமல் பேசிவிட்டார் என்று, புள்ளிவிவரங்களைக் கொடுத்து மறைக்கப் பார்த்தார்[2]. அதுவும் எடுபடாமல் போகவே, அருந்ததியருக்கு ஒதுக்கீடு என்று ஆரம்பித்தார். ஆனால், அதிலும் பங்கை வெட்டி குஸ்லீம்களுக்கும், கிருத்துவர்களுக்கும் கொடுத்து அவர்களை ஏமாற்றினர். இதன் மூலம், மலம் அள்ளும் பிரச்சினை மறைக்கப்பட்டு விட்டது[3]. முழுவிவரங்களுக்கு, என்னுடைய 23-08-2008 தேதியிட்ட கீழ்காணும் கட்டுரையை வாசிக்கவும்[4].


சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு (2008-2011): மனிதக் கழிவுகளை மனிதர்களே அகற்றும் அவலத்தை நீக்க போதிய நடவடிக்கைகளை எடுக்காமல் மத்திய அரசு அலட்சியம் செய்து வருவதாக கூ‌றி கண்டன‌ம் தெ‌ரி‌வி‌த்து‌ள்ள சென்னை உயர் நீதிமன்றம், இதனை தடுப்பதற்கான சட்டத் திருத்தத்தை ஆகஸ்‌ட்டி‌ல் கொண்டுவராவிட்டால் பிரதமர் அலுவலக அதிகாரியை ‌நீதிம‌ன்ற‌த்தில் ஆஜராக உத்தரவிடுவோம் என்று எ‌ச்ச‌ரி‌க்கை ‌விடு‌த்து‌ள்ளது.


விருகம்பாக்கம் நாராயணன்தொடுத்த வழக்கு (2008): சாக்கடை அள்ளும் பணிகளுக்கு மனிதர்களை பயன்படுத்துவதற்கு தடை விதித்து 2008ஆம் ஆண்டு சென்னை உயர்நீதிமன்ற‌ம் உத்தரவிட்டிருந்தது. ஆனால் அந்த உத்தரவை சரிவர அமல்படுத்தவில்லை என்று கூறி மத்திய, மாநில அரசுகள் மீது விருகம்பாக்கத்தைச் சேர்ந்த நாராயணன் எ‌ன்பவ‌ர் ‌‌நீ‌திம‌ன்ற அவமதிப்பு வழக்கு தொடர்‌ந்தா‌ர். சாக்கடை கால்வாய், கழிவுநீர்த் தொட்டி ஆகியவற்றில் இந்தப் பணிக்காக மனிதர்கள் இறங்கும்போது விஷ வாயு தாக்கி பலர் உயிரிழப்பதால் எந்திரங்கள் மூலம் பராமரிப்புப் பணிகளை நடத்த வேண்டும் என்று அதில் கூறியிருந்தார். கிடப்பில் போடப்பட்டதுப் போல இருந்த வழக்கை, இப்பொழுது தூசி தட்டி எழுப்பியது ஏன் என்ற கேள்வியும் எழுகிறது. அதாவது, நீதிமன்றங்கள் சில வழக்குகளில் தினம்-தினம், ஏதோ அவைதான் முக்கியம் போல எடுத்துக் கொள்கின்றன, இல்லையென்றால், இப்படி வருடக்கணக்காக அமைதியாக இருக்கின்றன.


தொடர்ந்த ‌‌நீதிமன்றஅவமதிப்புவழக்கு (2010):  இந்த வழக்கை தலைமை நீதிபதி எம்.ஒய்.இக்பால், நீதிபதி டி.எஸ்.சிவஞானம் ஆகியோர் விசாரிக்கின்றனர். இந்த அவமதிப்பு வழக்கில் ஐகோர்ட்டில் தமிழக அரசு அதிகாரிகள் சிலர் நேரில் ஆஜராகி விளக்கம் அளித்தனர். மனித துப்புரவு பணியாளர்கள் நியமனம் மற்றும் உலர் கழிவறைகள் கட்டுமான தடுப்புச் சட்டத்தில் (மத்திய அரசுச் சட்டம்) சில திருத்தங்களை கொண்டு வந்தால்தான், மனிதர்களை அதில் பயன்படுத்தாமல் இருக்க தமிழக அரசு சட்டப்பூர்வமான நடவடிக்கைகளை எடுக்க முடியும் என்றும் விளக்கம் அளிக்கப்பட்டது. அப்படியென்றால், திராவிட அறிவு ஜீவிகள் அத்தகைய திருத்தங்களைக் கொண்டுவராமல் என்று செய்து கொண்டிருந்தன? பாராட்டு விழாக்கள் நடத்திக் கொண்டு, சல்லாபம் செய்து கொண்டிருந்தனரா?
மத்திய அரசின் பதில்: இதற்கு பதிலளித்த மத்திய அரசு வழ‌க்க‌றிஞ‌ர், அந்த சட்டத்தில், 2 மாநில அரசுகள் பரிந்துரைக்கும் பட்சத்தில்தான் அந்த சட்டத்தில் திருத்தங்கள் கொண்டு வரமுடியும் என்று சுட்டிக்காட்டினார். அப்படியென்றல், ஏன் திராவிட அரசு, அம்பேத்கரைப் பெயரைச் சொல்லி வியாபாரம் செய்யும் திராவிரட இனமான போராளிகள் தூங்கிக் கொண்டிருக்கிறார்கள்? “மத்தியிலும்-மாநிலத்திலும் நமதாட்சி” என்று மார்தட்டி பேசிக் கொண்டிருந்தனரே, அப்பேச்சு அதற்கு?  இந்த நிலையில் ‌நீ‌திம‌ன்ற அவமதிப்பு வழக்கில் மற்றொரு மனுவை நாராயணன் தாக்கல் செய்தார். அந்த மனுவை கடந்த வாரம் விசாரித்த நீதிபதிகள், இந்த விஷயத்தில் மத்திய அரசு எந்த முக்கியத்துவத்தையும் காட்டவில்லை. இதற்கு ஏதுவாக சட்டத்திருத்தம் கொண்டுவராதது எங்களுக்கு ஏமாற்றத்தை அளிக்கிறது.


தாமதிக்கும் அரசுகள்,  அரசு-அதிகாரிகள், மற்றவர்கள்: எனவே மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வறுமை ஒழிப்பு அமைச்சகத்தின் செயலாளர் இந்த வழக்கு விசாரணைக்காக ஜூன் 23ஆ‌ம் தேதி, 2011 ‌நீ‌திம‌ன்ற‌த்‌தி‌ல் நேரில் ஆஜராகி, எப்போது அந்த திருத்தச் சட்டம் அமல்படுத்தப்படும்? என்பதையும் குறிப்பிட வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர். இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தபோது மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வறுமை ஒழிப்பு அமைச்சகத்தின் செயல‌ர் ஆஜராகவில்லை. விசாரணை தேதியில் ஏற்பட்ட குழப்பத்தால் செயலாளரை ஆஜர்படுத்த முடியவில்லை என்று கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் எம்.ரவீந்திரன் தெரிவித்தார். அதைத் தொடர்ந்து நீதிபதிகள் பிறப்பித்த உத்தர‌வி‌ல், இந்த வழக்கு 29ஆம் தேதிதான் விசாரணைக்கு வருவதாக நினைத்ததாக கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் கூறினார். எனவே வழக்கு தொடர்பான ஆயத்தங்களை செய்யவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.


பிரதமர் அமைதியாக இருக்கிறாராம்! ஆனாலும் இணை செயலாளர் நேரில் ஆஜரானார். செயலாளர் தரப்பில் அவர் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில், சாக்கடை பராமரிப்பு பணிகளுக்கும், மனித கழிவுகளை அகற்றுவதற்கும் மனிதர்களை பயன்படுத்துவதை தவிர்ப்பதற்காக தகுந்த சட்டத் திருத்தங்கள் செய்ய பரிந்துரைத்து பிரதமருக்கு தேசிய ஆலோசனை கவுன்சில் தலைவர் கடிதம் எழுதிய பிறகு, இந்த விவகாரத்தில் பிரதமர் தனிக்கவனம் செலுத்துவதாக கூறப்பட்டுள்ளது. பாவம் இப்பொழுதுள்ள பிரதமர் அவர் என்ன செய்வார்? அவர் ஒன்றும் செய்யமாட்டார், அதாவது சோனியாவைக் கேட்காமல் அல்லது சோனியா ஆணையிடாமல் ஒன்றும் செய்ய மாட்டார் என்று தெரியும். பிறகு ஆச்சரியப் படவோ, கோபப்படவோபிதில் ஒன்றும் இல்லை.


ஆகஸட் 22ம்தேதிக்குதள்ளிவைத்து ஆணையிட்ட உரயர்நீதி மன்றம்: “இந்த மனு கண்டனத்துக்குரியதுதேவையானசட்டத்திருத்தங்களை செய்வதற்காக 6 மாதங்களாக விசாரணைநடத்தப்பட்டு வரும் சூழ்நிலையில் இதுவரை எந்த ஒருநடவடிக்கையும் எடுக்காதது எங்களுக்கு ஆச்சரியத்தை அளிக்கிறத.இந்த வழக்கை ஆகஸட் 22ம் தேதிக்கு தள்ளிவைக்கிறோம்.அதற்குள் தகுந்த சட்டத்திருத்தம் செய்யப்படாவிட்டால்பிரதமர்அலுவலகம்உள்துறை அமைச்சகம் அல்லது சட்டத்துறைஅமைச்சகத்தைச் சேர்ந்த உயர் அதிகாரிகளை ‌நீதிமன்றத்தில் நேரில்ஆஜராவதற்கு நாங்கள் உத்தரவு பிறப்பிக்க நேரிடும்இந்தவிவகாரத்தில் மத்திய அரசுடன்மாநில தலைமைச் செயலர்தொடர்ந்து தொடர்பு கொள்ள வேண்டும். ‌நீதிமன்ற உத்தரவைசெயல்படுத்துவதற்கு எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன என்பது பற்றியவிளக்கங்கள் அடங்கிய அறிக்கையை நீதிமன்றத்தில் தலைமைச்செயலாளர் தாக்கல் செய்ய வேண்டும்”, எ‌ன்று ‌நீ‌திப‌திக‌ள் உத்தர‌வி‌ட்டு‌ள்ளன‌ர்.


இக்கொடுமையை தடுக்காத திராவிடம் எதற்கு? விஞ்ஞானம்-தொழிற்நுட்பம் அதிகரித்துள்ளது, அதன் மூலம் எதை-எதையோ சாதிக்க முடிகிறது என்றும் ஒரு பக்கம் கூறிவருகிறார்கள். ஆனால், அவையும் இக்கொடுமையைத் தீர்க்க முடியவில்லை போலும். பிறகு, எதற்கு, எல்லா மட-இந்தியர்களும், குறிப்பாக திராவிடம் பேசும் தமிழர்கள் செல்போனை வைத்துக் கொண்டு, பேசிக் கொண்டு பேள வேண்டும், மற்றவர் இன்னும் அள்ள வேண்டும்? செல்போனை வைத்திருக்கும் தமிழனுக்கு இதுகூட புரியவில்லையா? கலர் டிவி பார்க்கும் திராவிடனுக்கு தெளிவாக விவரம் அறியப்படவில்லையா? பிறகு எதற்கு இத்தனை கலைஞர்கள், பேராசிரியர்கள், கவிக்கோக்கள், கவிபேரரசுகள், முதலிய வெட்டி-பட்டாளங்கள்? “ஏன் வேண்டும் இந்த இன்ப திராவிடம்?” என்று பேசினர் அன்று, “இக்கொடுமையை தடுக்காத திராவிடம் எதற்கு?” என்று இன்று கேட்கின்றனர் மக்கள்.


Thanks to http://socialsubstratum.wordpress.com

நவ-27-ல் அருந்ததியர் ஒதுக்கீடு முடிவு

சென்னை நவ-23.(டிஎன்எஸ்)  நீதிபதி ஜனார்த்தனம் கமிஷன் அறிக்கையின் பரிந்துரையை பரிசீலித்து முடிவெடுக்க 27ம் தேதி தமிழக அமைச்சரவை கூட்டம் நடைபெற உள்ளதாக முதலமைச்சர் கருணாநிதி தெரிவித்துள்ளார்.  ஆதிதிராவிடர்களுக்கான இட ஒதுக்கீட்டில் அருந்ததியர் சமுதாயத்தினருக்கென தனியாக  3 சதவீத உள்இடஒதுக்கீடு வழங்கலாம் என்பது நீதிபதி ஜனார்த்தனம் கமிஷன் அறிக்கையாகும்.

தாழ்த்தப்பட்டவர்களில் மிகவும் தாழ்த்தப்பட்டோ ராக உள்ள அருந்ததி யர் வகுப்பினர் முன்னேற்றத்துக்கு ஆதிதிராவிடருக்கு வழங்கப்பட்டு வரும் இடஒதுக்கீட்டில் உள் ஒதுக்கீடு வழங்க அரசு கருதியிருப்பதாக சட்டப்பேரவையில் ஆளுநர் உரையில் அறிவிக்கப்பட்டது.
அதன் தொடர்ச்சியாக தலைமைச் செயலகத்தில் சர்வகட்சிகள் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் அருந்ததியருக்கான உள்ஒதுக்கீடு குறித்து அரசுக்கு பரிந்துரை செய்ய உயர்நீதிமன்றத்திலிருந்து ஓய்வு பெற்ற நீதிபதியை கொண்ட ஒரு நபர் குழு அமைப்பது என்றும் அந்த குழுவின் அறிக்கையை 6 மாத காலத்திற்குள் பெற்று அதனை நடைமுறைப்படுத்துவது பற்றி அரசு முடிவெடுப்பது என்றும் தீர்மானிக்கப் பட்டது.

அந்த தீர்மானத்தின் அடிப்படையில் உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி எம்.எஸ்.ஜனார்த்தனம் தலைமையில் ஒரு நபர் குழு அமைக்கப்பட்டது. நீதிபதி ஜனார்த்தனம் இது குறித்து விரிவாக ஆய்வு செய்து அருந்ததியர் எனப்படுவோருள் அருந்ததியர், சக்கிலியர், மாதாரி, ஆதி ஆந்திரர், பகடை, மடிக்கா, தோட்டா ஆகிய பிரிவினரையும் உள்ளடக்கி அவர்களின் மொத்த மக்கள் தொகை அடிப்படையில் ஆதிதிராவிடர்களுக்கு வழங்கப்பட்டு வரும் 18 சதவீத இடஒதுக்கீட்டில்  3 சதவீத உள் ஒதுக்கீட்டினை வழங்கலாம் என்று பரிந்துரை செய்தார்.

நவ-22 அன்று இந்த அறிக்கையை தமிழக அரசிடம் நீதிபதி ஜனார்த்தனம் அளித்தார். அருந்ததியர் சமுதாயத்தினருக்கு தனி இடஒதுக்கீடு வழங்கலாம் என்ற இந்த பரிந்துரை அறிக்கையை பரிசீலனை செய்து முடிவெடுப்பதற்காக வரும் 27ந் தேதி தமிழக அமைச்சரவை கூட்டம் நடைபெற உள்ளது.

அமைச்சரவை கூட்டத்தில் மேற்கொள்ளப்படும் முடிவின் அடிப்படையில்,  அருந்ததியர் சமுதாயத்தினருக்கு தனி இடஒதுக்கீடு வழங்குவதற்கு, சட்டரீதியான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படும் என்று  முதல்வர் கருணாநிதி நவ-23 அன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது. (டிஎன்எஸ்)



Thanks to http://tamil.chennaionline.com

அருந்ததியர் - கலைஞர் நிலையும் காம்ப்ளேயின் கருத்தும்


அருந்ததியர் சமூக்திற்குத் தமிழக அரசால் வழங்கப்பட்ட மூன்று விழுக்காடு உள் இட ஒதுக்கீடு, அரசியல் அமைப்புச் சட்டத்திற்கு மாறானது என்றும், அதை எதிர்த்து நீதிமன்றத்தில் கூட வழக்குத் தொடரலாம் எனவும் சென்னையில், தலைமைச் செயலகத்தில் தேசிய ஆதிதிராவிடர் நல ஆணையத்தின் துணைத் தலைவர் என்.எம். காம்ப்ளே நேர்காணல் ஒன்றில் கூறியிருக்கிறார்.
அவரது பேச்சு ஏதோ ஓர் எதிர்க்கட்சித் தலைவர் பேசுகின்ற பேச்சைப் போலத் தெரிகிறதே ஒழிய, ஒடுக்கப்பட்ட மக்களுக்கான ஆணையத்தின் பொறுப்புள்ள துணைத் தலைவரின் பேச்சாகத் தெரியவில்லை. அதுமட்டுமல்லாமல், அருந்ததியருக்கு உள் ஒதுக்கீடு செய்தது பற்றித் தமிழக அரசு தங்களுக்குத் தெரிவிக்க வில்லை என்றும் கூறியிருக்கிறார்.
காம்ப்ளேயின் இந்தக் குற்றச்சாட்டிற்குத் தமிழக முதல்வர் கலைஞர் அவர்கள் அழுத்தமான விளக்கமொன்றை அளித்திருக்கிறார்.  “ஆதிதிராவிடர்களுள் மிகமிகப் பின்தங்கிய அருத்ததியர் வகுப்பினரின் முன்னேற்றத்திற்குச் சிறப்புச் சலுகைகள் அவசியம் என்ற அடிப்படையில் ஆதிதிராவிடர்களுக்கு வழங்கப்பட்டு வரும்  இடஒதுக்கீட்டில், அருந்ததியர்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்குவது குறித்து ஆராய, நீதியரசர் எம்.எஸ்.ஜனார்த்தனம் கொண்ட ஒரு நபர் குழு அமைக்கப்பட்டது. அக்குழுவின் அறிக்கை அடிப்படையில் அருந்ததியர்களுக்கு 3 சதவீத உள் ஒதுக்கீடு வழங்க முடிவு செய்யப்பட்டது. அதை நடைமுறைப் படுத்தும் முன், தேசிய ஆதிதிராவிடர் நல ஆணையத் தலைவர் பூட்டாசிங்கிற்கு 25.11.2008 இல் தலைமைச் செயலாளர் கடிதம் எழுதியிருக்கிறார்.
“அந்த ஆணையத்தின் துணைத் தலைவர்  அளித்த பேட்டியில் அவர்களுக்குத் தமிழக அரசு தெரிவிக்கவே இல்லை என்று சொல்லியிருக்கிறார். தலைமைச் செயலாளர் எழுதிய கடிதத்திற்கு ஆணையத்தின் சார்பில் 19‡02‡2009 இல் பதிலும் எழுதியிருக்கிறார்கள். அந்தக் கடிதமும் உள்ளது. எனவே தமிழக அரசு அவர்களுக்குத் தெரிவிக்கவில்லை என்று சொல்வது முற்றிலும் தவறான செய்தி.
“அது மாத்திரம் அல்ல அருந்ததியர்களுக்கு உள்ஒதுக்கீடு செய்வதுபற்றி, தேசிய ஆதிதிராவிடர் நல ஆணையத்தின் கவனத்திற்குக் கொண்டு செல்ல வேண்டும் என்றுதான் விதியிருக்கிறதே தவிர, அவர்களின் ஒப்புதல் பெற்ற பிறகுதான் ஒதுக்கீடு செய்யவேண்டும் என்பதில் எந்தவிதக் கட்டாயமும் கிடையாது. அதனால்தான் தமிழக அரசின் சார்பில் தேசிய ஆதிதிராவிடர் நல ஆணையத்திற்கு இந்த உள் ஒதுக்கீடு பற்றி அறிவித்துவிட்டு அந்த ஆணையத்திடமிருந்து இதற்கு ஒப்புதல் கிடைக்காத நிலையில் ஒருநபர் குழு தலைவராக இருந்த ஜனார்த்தனத்தையும் கலந்து ஆலோசித்து, அதற்கு மேலும் அருந்ததியருக்கு இடஒதுக்கீடு செய்யக் காலதாமதம் செய்யக்கூடாது என்ற அக்கறையுடன் அருந்ததியருக்கு உள்ஒதுக்கீடு செய்யப்பட்டது,” என்ற முதல்வரின் விளக்கம், அருந்ததியர் முன்னேற்றத்தில் அவருக்கிருந்த அக்கறையையும், எடுத்த சரியான நடவடிக்கைçயும் தெளிவுபடுத்துகிறது.
உண்மையைச் சொன்னால் அருந்ததியர்களைப் பற்றி காம்ப்ளே மட்டுமல்ல, தமிழ்நாட்டில் கூட பலருக்குத் தெரியவில்லை. அருந்ததியர்கள் 17 ஆம் நூற்றாண்டில் ஆந்திரத்தில் இருந்து தமிழகம் வந்தவர்கள் என்று சிலர் தவறாகப் பேசுகிறார்கள்.
முதலாம் குலோத்துங்கனின் பத்தாம் ஆட்சியாண்டில் வடிக்கப்பட்ட சதுர்வேதி மங்கலக் கட்வெட்டிலும், அதே கால கட்டங்களில் உருவான இடங்கை, வலங்கை சாதிப் பிரிவில் இடங்கைப் பிரிவிலும், 12 ஆம் நூற்றாண்டில் கவுண்டர்களுக்கு ராயர் அளித்த செப்புப் பட்டயத்திலும், 15 ஆம் நூற்றாண்டின் பேரூர் செப்புப் பட்டயத்திலும் இந்தக் காலகட்ட ஓலைச்சுவடிகளிலும் அருந்ததியர் பெயர் பதிவாகியிருக்கின்றது. இது 17 ஆம் நூற்றாண்டுக்கு முற்பட்ட காலம். இதைப் புரிந்து கொண்டால் அருந்ததியர் தமிழ்நாட்டினர், தமிழர்கள் என்பதைப் புரிந்துகொள்வார்கள்.
1991 ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட மக்கள் தொகை அடிப்படையில் தமிழகத்தில் தாழ்த்தப்பட்டவர்கள் 1,07,12,266. இதில் அருந்ததியர்கள் 32.5 விழுக்காடு. அதாவது தாழ்த்தப்பட்டோரில் மூன்றில் ஒரு பங்கு, 35,00,000 பேர்கள். இவர்களின் கல்வித் தகுதி என்று பார்த்தால், பள்ளிக்குச் செல்லாமல் எழுத்தறிவு பெற்றவர்கள் 5.93 விழுக்காடு. தொடக்கக் கல்வி படித்தவர்கள் 1.75 விழுக்காடு. மெட்ரிக் மேல்நிலைக் கல்வி படித்தவர்கள் 0.16 விழுக்காடு. மொத்தத்தில் கல்வி பெறாதவர்கள் மட்டும் 92.16 விழுக்காட்டினர் அருந்ததியர்.
அரசுத் துறையில் அருந்ததியர்கள் முழு நேரப்பணியாளர்களாக 8.14 விழுக்காட்டினரும், பகுதிநேரப் பணியாளர்களாக 8.15 விழுக்காட்டினரும் மட்டுமே இருக்கின்றனர். நிலம் சார்ந்த அருந்ததியர் வாழ்க்கையைப் பார்த்தால் விரல் விட்டு எண்ணக் கூடிய சிலர் மட்டுமே சிறிது நிலம் வைத்திருக்கின்றனர். இவர்களை சதவீதத்தின் அடிப்படையில் கூட சொல்லமுடியாது. கூலி விவசாயிகளாக 22.79 விழுக்காட்டினர் இருக்கின்றனர். தவிர ஏறத்தாழ 25.51 விழுக்காட்டினர் பண்ணை அடிமைகளாக இருக்கின்றனர்.
தாழ்த்தப்பட்ட மக்களில் சமூக அளவில் தாழ்த்தப்பட்டுக் கிடக்கும் அருந்ததிய மக்களின் நிலை இதுதான். தேசிய ஆதிதிராவிடர் நல ஆணையத் துணைத் தலைவர் காம்ப்ளேவிற்கு இவையயல்லாம் தெரிய வாய்ப்பில்லை. இட ஒதுக்கீடு என்பது சமூக நீதி என்பதும், அதற்காகத் தந்தை பெரியார், பேரறிஞர் அம்பேத்கர் போன்றவர்கள் போராடிய போராட்டங்கள் எல்லாம் காம்ப்ளேவிற்குத் தெரியவாய்ப்பில்லை. அதனால்தான் முதல்வர் கலைஞர் கொடுத்த மூன்று விழுக்காடு இடஒதுக்கீடு சட்டத்திற்குப் புறம்பானது என்றும் நீதிமன்றத்திற்குப் போகலாம் என்றும் பேசியிருக்கிறார்.
கருத்தற்ற காம்ப்ளேயின் பேச்சை மறுத்து, “தேசிய ஆதிதிராவிடர் நலத் தலைவரே இப்படி பேட்டியில் கூறியிருப்பது அருந்ததியர் சமூகத்திற்கு தீமை விளைவிக்கக் கூடியதாகும். எனவே அது மிகவும் வருத்தத்தைத் தரக்கூடிய ஒன்றாகும்” என்ற அருந்ததியர் பால் அக்கறை கொண்டிருக்கும் முதல்வர் கலைஞரின் மறுப்பறிக்கை ஆறுதலைத் தருகிறது.
இங்கே தலைவர் கலைஞர் அவர்களின் மேன்மைமிகு கவனத்திற்கு ஒருசெய்தியைக் கொண்டு வருவது சரியாக இருக்கும். நீதியரசர் அவர்கள் பரிந்துரையின்படி தமிழக அரசு வெளியிடட குறிப்பில், இந்த மக்கள் அருந்ததியர், சக்கிலியர் என்று இரண்டு பிரிவாக மட்டுமே கூறப்பட்டுள்ளனர். இது தலைவரின் கவனத்திற்குச் சரியாகக் கொண்டுவரப்படாத செய்தியாகும்.
அருந்ததியர், சக்கிலியர், மாதிகா, மாதாரி, பகடை, செம்மான் ஆகிய பெயர்களில் இருப்பவர்கள் அனைவருமே அருந்ததியர். தமிழக மேற்கு மாவட்டங்களில் வாழும் அருந்ததியர் மாதாரி என்றும் மாதிகா என்றும் அழைக்கப்படுகின்றனர். தென்தமிழ் நாட்டில் இவர்கள் பகடை, செம்மான் என்று அழைக்கப்படுகின்றனர். தமிழகம் முழுவதும் இவர்கள் அருந்ததியர் என்றும் சக்கிலியர் என்றும் அழைக்கப்படுகின்றார்கள். நீதியரசர் அறிக்கைப் படி, 7.5 லட்சம் அருந்ததியர், 7.5 லட்சம் சக்கிலியர், மொத்தம் இம்மக்கள் 15 லட்சம் பேர் இருக்கிறார்கள்.
இங்கே விடுபட்ட மாதிகா, மாதாரி, செம்மான், பகடை ஆகிய பெயர்களில் வாழும்அருந்ததியர் மக்கள் தொகை நீதியரசரின் கணக்கில் வரவில்லை. 1991 ஆம் ஆண்டு  மொத்த தாழ்த்தப்பட்ட மக்கள் தொகையான 1,07,12,266 பேர்களில் 32.5 விழுக்காடு அதாவது மூன்றில் ஒரு பங்கினர் அருந்ததியர், 35 லட்சம் பேர்கள். கடைசியாக எடுக்கப்பட்ட 2001 ஆம் கணக்குப் படி மொத்தத் தாழ்த்தப்பட்ட மக்கள் தொகை விழுக்காடு 22.55. எனவே அருந்ததியர் மக்கள் தொகையும் இங்கே கூடியிருக்கின்றது.
இப்படி, தாழ்த்தப்பட்ட மக்கள் தொகையில் மூன்றில் ஒரு பங்கினராகவும், சமூக, பொருளாதார அளவில் கல்வி, வேலைவாய்ப்பு, நிலம் சார்ந்த தொழில், அரசின் உயர் பதவிகள், ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ் போன்ற பதவிகள், அரசியல் உள்பட பலநிலைகளிலும் மிகவும் பின் தள்ளப்பட்டு இருப்பவர்கள் அருந்ததியர்கள்.
இந்த மக்களுக்காகத் தமிழக அரசு, மூன்று விழுக்காடு உள்ஒதுக்கீடு வழங்கியது நன்றிக்குரியது என்பதை மறுப்பதற்கில்லை. ஆனாலும், இம்மக்களின் மக்கள் தொகை அடிப்படையில் இது குறைவான ஒதுக்கீடு. தாழ்த்தப்பட்ட மக்களில் மூன்றில் ஒரு பங்கினராக இருக்கும் அருந்ததியர்களுக்கு மூன்றில் ஒன்றாக 6 விழுக்காடு வழங்கப்படவேண்டும். எஞ்சிய 3 விழுக்காடும் கலைஞர் ஆட்சியிலேயே நிறைவேற்றப் பட வேண்டும் என்பது அருந்ததியர்களின் எதிர்பார்ப்பாகும்.
ஆரியத்தால் கொடுமையாக ஒடுக்கப்பட்டு ஒதுக்கப்பட்ட அருந்ததியர்கள், திராவிடத்தால் விழிப்படையத் தொடங்கியிருக்கும் இந்த வேளையில், காம்ப்ளே போன்றவர்களின் கருத்து, கலைஞர் மக்கள் பணிக்கு முன்னால் நிற்கவும் முடியாது நிலைக்கவும் முடியாது.
- மாதியக்கவிராயர்
Thanks to www.Keetru.com

இன்னா பண்றது? சோறு துன்னாவணுமே!


இன்னா பண்றது? சோறு துன்னாவணுமே!
ஆதிமூலம்

துன்பப்படுகிறவர்களைக் கண்டால் ஓடோடி துயர் நீக்கும் ஹீரோக்களும், குத்தாட்டம் போட்டே கலைச்சேவை செய்கிற ஹீரோயின்களும் நிறைந்த கோடம்பாக்கத்தில் ஒரு நாள்.
இடுப்பில் கோவணம், கையில் ஒரு மூங்கில் கழியோடு தள்ளாத வயதில் சேற்றில் புதைந்து கிடந் தார் அந்த மனிதர். வகைவகையாய் மனிதர்கள் தின்று கழித்த சேறு அது. கைக்குட்டையால் மூக்கைப் பொத்திக் கொண்டு இரண்டு கால் ஜீவன்கள் சிரமத்துடன் கடந்து கொண்டிருந்தனர். அருகில் நின்று பேச்சுக் கொடுத்தேன்.
“”வயசானவன்னு பாக்கறியா! தொழில் சுத்தமா இருக்கும்” என்று ஆரம்பித்தார். “”பேரு ஆதிமூலம். ஊரு மதுராந்தகம். எத்தினி வயசுன்னு எனக்கே தெரியாது. 53ல வேலைக்கு சேந்தேன். 96ல ரிட்டைடு ஆயிட்டேன். மூவாயிரம் ரூபா சம்பளம். மொத சம்சாரம் அம்மச்சி செத்துப் போனப்புறம் ரெண்டாவதா சந்திராவ கல்யாணம் பண்ணிக்கிட்டேன். மொத்தம் எனுக்கு நாலு பசங்க. ஒரு பையன் மூணு பொண்ணு. ஒரு பொண்ணுக்கு கல்யாணம் பண்ணிக் குடுத்துட்டேன். ரெண்டு பொண்ணுங்களும் இப்பத்தான் ஏழாவது, எட்டாவது படிக்குதுங்க. பையன் செரியான தண்டச்சோறு. அவனால ஒரு புரோசனமும் இல்ல. ஊரோட போயிட்டான். நான் ஒத்த ஆளு சம்பாரிச்சித்தான் இதுங்கள கரையேத்தணும். வயசாயிடுச்சி, ஒடம்புக்கு முடியலைன்னு ஒக்காந்திருந்தா சோறு சும்மாவா வந்துரும்? இப்பத்தான் கண் ஆப்ரேசன் பண்ணேன். அப்பவும் பார்வ செரியா தெரில. இந்த சிலாப தூக்குறேன். உள்ள “தண்ணி நிக்கிதா’ன்னு பாத்து சொல்றியா? கோச்சிக்காதே…” என்று உதவி கேட்கிறார்.
“”மாசத்துக்கு எவ்ளோ வருமானம் வருது. வேலைன்னா எப்படி வந்து உங்களைக் கூப்பிடுவாங்க?” ஏதோ… நானும் கேள்விகள் கேட்டேன்.
“”பென்ஷன் பணம் வருது. அத்த வச்சிகினு சமாளிக்க முடியல. எப்பனா ஒரு வாட்டிதான் இது மேரி (மாதிரி) அடைப்பெடுக்க கூப்புடுவாங்க. அடையாறு பீலியம்மன் கோயிலாண்டதான் ஊடு. கூட்டமா கீறதால பஸ்ல ஏறமாட்டேன். அவுங்கள கொற சொல்லக்கூடாது. நம்ப மேல நாறுது. போயி பக்கத்துல நின்னா யாருக்குத்தான் கோவம் வராது. அதான் எங்கயிருந்தாலும் நடந்தே ஊட்டுக்குப் போயிடுவேன். போற வழியில அங்கங்க சொல்லி வச்சிருவேன். எடத்துக்கு ஏத்த மாதிரி 100, 200 தருவாங்க.”
“”எப்படி இந்த வேலைக்கு வந்தீங்க?”
நகர சுத்தி தொழிலாளர்கள்“”எல்லாம் கெவுருமண்டு வேலைக்காகத்தான். நான் ஜாதில நாயக்கரு. போயும் போயும் இந்த வேலைக்கு வந்துக்கிறீயேடா?ன்னு எங்காளுங்க கேழி (வசைச் சொல்) கேட்டாங்க. எஸ்.சி. ஆளு ஒருத்தர்தான் இந்த வேலைல சேத்து உட்டாரு. ஆரம்பத்துல படாத கஷ்டமெல்லாம் பட்டேன். ஒரு நாளைக்கு ஒம்பது வாட்டி வாந்தியா எடுத்துக் கெடந்தேன். சோத்த அள்ளி வாயில வச்சாப் போதும், அப்பத்தான் எங்கங்க கைய வச்சி அள்னமோ அதெல்லாம் ஞாபகத்துக்கு வரும்.
நாம இன்னாத்தான் சொன்னாலும் செரி, போடக் கூடாதெலாம் கக்கூஸ்ல போட்ருவாங்க. அப்புறம் அடச்சிக்கும். ட்ரெய்னேஜ் மூடியத் தொறந்தாப் போதும், ஆயிரக்கணக்குல கரப்பாம்பூச்சிங்க, பூரான், தேளுன்னு என்னென்னமோ ஓடும். பல்லக் கடிச்சிக்கினு உள்ள எறங்கிடுவோம். நின்ன வாக்குல காலால தடவித் தடவிப் பாப்போம். அப்பிடியே வழியக் கண்டுபுடிச்சி கண்ண மூடிக்கினு எறங்கிட வேண்டியதுதான். வேல முடியிறதுக்குள்ள பத்து பாஞ்சி தடவையாவது முழுவி எழுந்திருச்சிடுவோம். சாதாரணத் தண்ணியா அது. காதெல்லாம் சும்மா “கொய்ய்ய்ய்ய்ங்’ன்னு அடைச்சிக்கும். கண்ணு, காது, மூக்கு, வாயின்னு ஒரு எடம் பாக்கியிருக்காது. இன்ன பண்றது? சோறு துன்னாவணுமே!
எங்கூட வேல செய்ற ஆளுங்கள்லாம் சரக்குப் போட்டுட்டுத் தான் காவாயில எறங்குவானுங்க. வாங்குற சம்பளத்த குடிக்கே… அழிச்சிருவானுங்க. எனக்கு அன்னிலருந்தே பீடி, குடி ரெண்டுமே கெடையாது. அதனாலதான் இன்னிக்கி வரிக்கும் நான் உயிரோட கீறேன்.”
“”இவ்ளோ கஷ்டமும் யாருக்காக? பொண்ணுங்களுக்காகத்தான். அதுங்களுக்கு காலா காலத்துல ஒரு கல்யாணத்தப் பண்ணிட்டேன்னா நிம்மதியா கண்ண மூடிடுவேன்.”

நவீன தீண்டாமை ..... தீர்வு ?





நவீன தீண்டாமை கோவை மாவட்டம், உடுமலைப் பேட்டை வட்டம், பாப்பான்குளம் ஊராட்சிக்கு உட்பட்ட சாளரப்பட்டி கிராமத்தில் சுமார் 70 தாழ்த்தப்பட்ட அருந்ததியர் குடும்பங்களும், சுமார் 600-க்கும் மேற்பட்ட சாதி இந்துக்கள் குடும்பங்களும் வாழ்ந்து வருகிறார்கள். இக்கிராமத்தில் சாதி இந்துக்களால் நடத்தப்படும் 11 தேநீர் கடைகளிலும் இரட்டை டம்ளர் முறை நடைமுறையில் உள்ளது. இந்த நடைமுறையை நீக்கி, தேநீர் கடை உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு ஆதித்தமிழர் பேரவையின் மடத்துக்குளம் ஒன்றியச் செயலாளர் அருந்ததியன் குமரலிங்கம் காவல் நிலையத்தில் புகார் செய்துள்ளார்.புகார் மனு ஏற்புச் சான்று எண் 16/2008. போலீசார் நடவடிக்கை எடுக்காமல் சமாதானம் பேசியுள்ளனர். இதனிடையே சாதி இந்துக்கள் 11 தேநீர் கடைகளையும் அடைத்து எதிர்த்துள்ளனர். தினமும் மூடியிருப்பதால் வருமானம் பாதிக்கிறது என்பதால் கடந்த 14-ஆம் தேதி இரண்டு தேநீர் கடைக்காரர்கள் கடையை திறந்துள்ளனர். பிற தேநீர் கடைக்காரர்களும், சாதி இந்துக்களும் சேர்ந்து, அந்த இரண்டு கடைகளையும் அடித்து உடைத்துள்ளனர்.
அதே நேரத்தில், உடுமலைப்பேட்டையில் ஆர்பாட்டத்தை முடித்து விட்டு ஊருக்கு திரும்பிக்கொண்டிருந்தனர் அருந்ததியர்கள். இந்நிலையில் ஊர்த்தெருவில் உள்ள சின்னான்டவர் கோயிலில் தலித்துகள் நுழையப்போவதாக பொய்ப்பிரச்சாரம் செய்து, ஊரில் உள்ள பிற சாதி இந்துக்களையும் அழைத்துக்கொண்டு தலித் குடியிருப்பிற்குள் நுழைந்து, வீட்டில் இருந்த தலித் சமூகத்தைச் சேர்ந்த பெண்கள், குழந்தைகள், வயதானவர் என அனைவரையும் தாக்கி, அடித்துக் காயப்படுத்தி உள்ளனர். இரண்டு வீட்டருகில் தீ வைத்தும் எரித்துள்ளனர். சாதி இந்துக்களின் தாக்குதலில் காயமடைந்த சுமார் 18 தலித்துகள் உடுமலை, கோவை, திருப்பூர் மருத்துவமனைகளில் சிகிச்சப் பெற்று வருகிறார்கள்மேற்படி சம்பவம் தொடர்பாக விசாரித்ததில் கீழ்கண்டவைகளை அறியமுடிந்தது.

உடுமலைப்பேட்டை வட்டத்தில் உள்ள பல்வேறு கிராமங்களிலும், மேற்படி சாளரப்பட்டி கிராமத்திலும் தேநீர் கடைகளில் இரட்டை டம்ளர் முறை நடைமுறையில் உள்ளது என்பதையும், தலித் மக்களுக்கு தனி குவளையில் தேநீர் தரப்படுகிறது என்பதையும், தேநீரை வெளியில் நின்றுகொண்டோ அல்லது தரையில் அமர்ந்துகொண்டோ குடிக்கின்ற நிலை உள்ளது என்பதையும், மேற்படி 11 தேநீர் கடை உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுத்து, இரட்டை டம்ளர் முறையை தடுக்கக்கோரி, ஆதித்தமிழர் பேரைவயின் மடத்துக்குளம் ஒன்றியச் செயலாளர் அருந்ததியன் கடந்த 07.02.08 அன்று குமரலிங்கம் காவல் நிலையத்தில் புகார் தந்துள்ளார், ரசீது எண் 16/2008 என்பதையும் கண்டறிய முடிந்தது.புகாரைப்பெற்ற குமரலிங்கம் காவல் நிலைய ஆய்வாளர் பழனிமுத்து, தேநீர் கடைக்காரர்கள் அனைவரையும் அழைத்துப் பேசி, கடைகளில் இனி அனைவருக்கும் ஒரே மாதிரியான தம்ளரில் தேநீர் கொடுக்குமாறு பேசியுள்ளார்.சாதி இந்து சமூகத்தைச் சேர்ந்த தேநீர் கடைக்காரர்கள் இந்த முடிவை ஏற்காமல் 11 தேநீர் கடைகளையும் அடைத்து எதிர்த்துள்ளனர். வருமானம் போகின்றதே என கிருஷ்ணசாமி செட்டியார், கருணாநிதி செட்டியார் ஆகிய இருவரும் கடந்த 14.02.08 அன்று தங்களது தேநீர் கடைகளை திறந்துள்ளார்கள் என்பதையும், பிற தேநீர் கடைக்காரர்களும், ஊரின் சாதி இந்துக்களும் சேர்ந்து, ஊர்க் கட்டுமானத்தை மீறி எப்படி கடையைத் திறக்கலாம் எனக்கூறி இரண்டு தேநீர் கடைகளுக்குள்ளும் புகுந்து கடையில் இருந்த பொருட்கள் அனைத்தையும் அடித்து உடைத்துள்ளனர்.


தகவலறிந்த போலீசார் கிராமத்திற்கு வந்துள்ளனர். பின்பு வட்டாட்சியர் சந்திரபோசு ஊர் மக்கள் அனைவரையும் மறுநாள் 15.02.08 அன்று குமரலிங்கம் காவல் நிலையத்திற்கு அழைத்துப் பேச்சு வார்த்தை நடத்தியுள்ளார். தொடர்ந்து போலீசார் பாதுகாப்பில் இருக்கும் படியும், தேநீர் கடைகளில், ஒரு முறை மட்டும் பயன்படுத்தும் பிளாஸ்டிக் டம்ளர் பயன்படுத்தும் படியும் பேசியுள்ளார். ஆனால் தேநீர் கடைக்காரர்கள் வட்டாட்சியரின் இந்த அறிவுறுத்தலையும் ஏற்காமல் எதிர்த்துள்ளனர். தொடர்ந்து தேநீர் கடைகளை அடைத்து வந்துள்ளனர்.

இந்நிலையில், ஆதித் தமிழர் பேரவை அமைப்பினர் உடுமலைப்பேட்டையில், கடந்த 07.02.08 அன்று மேற்படி அருந்ததியன் கொடுத்த புகாரின்மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்காததைக் கண்டித்து ஆர்பாட்டம் நடத்தியுள்ளனர். ஆர்பாட்டத்தை முடித்துவிட்டு ஆதித்தழிழர் பேரவையைச் சேர்ந்த சாளரப்பட்டி பூபதி, கோட்டமங்கலம் வீராச்சாமி ஆகிய இருவரும் டி.வி.எஸ்.சுசுகி வண்டியில் சாளரப்பட்டி சென்றுள்ளனர். அங்கிருந்த அருந்ததியர் மக்களிடம் பேசிக்கொண்டிருந்துவிட்டு வீராச்சாமி கிளம்பியுள்ளார். அப்போது அவருடன் முருகன் என்பவரும் வண்டியில் சென்றுள்ளார்.

மேற்படி வீராச்சாமி, முருகன் ஆகிய இருவரும் இருசக்கர வாகனத்தில் ஊர்த்தெரு வழியாக செல்லும்போது, சாதி இந்து சமூகத்தைச் சேர்ந்த கனகராஜ் த/பெ முத்துசாமி கவுன்டர், மாரிமுத்து த/பெ வேலுச்சாமி, வேலுக்கண்ணன் த/பெ சின்னசாமி, வெள்ளியங்கிரி த/பெ முருகேசன், மயில்சாமி த/பெ பழனி கவுண்டர் உள்ளிட்ட சுமார் 25 பேர் மேற்படி வீராச்சாமி, முருகன் ஆகிய இருவரையும் வழி மறித்து கையில் வைத்திருந்த தடி, அருவாள், கத்தி, வண்டிப்பட்டா போன்ற ஆயுதங்களால் தாக்கியுள்ளனர். ‘‘எங்களை எதிர்த்து ஆர்பாட்டம் செஞ்சிட்டு, சக்கிலி தாயாலிங்களா இங்க எங்க ஊருக்கு வர்ரீங்களா’’ என்றும், ‘‘நீங்கதான் இங்க வந்து இங்க இருக்கிற சக்கிலியன்கள தூண்டி விடுறீங்களா’’ என்றும் மிரட்டியுள்ளனர். இவ்வாறு தாக்கபட்டதில் மேற்படி வீராச்சாமிக்கு மூக்கிலும், மார்பிலும் கடுமையாக அடிப்பட்டுள்ளார்.
ஊர்த்தெருவில் மேற்படி வீராச்சாமியை அடித்த சாதி இந்துக்கள், சுமார் 200&க்கும் மேற்பட்டோர் அருந்ததியர் குடியிருப்பிற்குள் புகுந்து வீடுகளையும், கண்ணில் பட்ட ஆண்கள், பெண்கள், குழந்தைகள், வயதானவர்கள் என அனைவரையும் கடுமையாக தாக்கியுள்ளனர். சாதி இந்துக்களின் தாக்குதலில் அருந்ததியர் மக்களின் 16 வீடுகள் சேதமடைந்துள்ளன.
ஆண்கள், பெண்கள் உள்ளிட்ட 18 பேர் கடுமையாக காயமடைந்து உடுமலைபேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகிறார்கள். இரண்டு வீடுகளில் துணிகளையும், ஓலைகளையும் தீ வைத்து கொளுத்தியுள்ளனர். சாதி இந்துக்களின் தாக்குதலில் காயமடைந்த மேற்படி வீராச்சாமி, நடந்த சம்பவம் தொடர்பாக குமரலிங்கம் காவல் நிலையத்தில் புகார் தந்துள்ளார். கா.நி.கு.எண் 24/08 பிரிவுகள் 147,148,341,324,307 இதச உடன் 3(1)(x) எஸ்.சி/எஸ்.டி சட்டத்தின் படி வழக்கு பதிவு செய்ய்துள்ளனர். அருந்ததியர்கள் குடியிருப்பிற்குள் புகுந்து சாதி இந்துக்கள் தாக்கியது தொடர்பாக மாரானி த/பெ திருமால் என்பவர் தந்த புகாரின் பேரில் கா.நி.கு.எண் 26/08 பிரிவுகள் 147,148, 324,307 இதச உடன் 3(1)(x) எஸ்.சி/எஸ்.டி சட்டம் ஆகியவற்றின் வழக்கு பதிவு செய்துள்ளனர். கடந்த 14&ஆம் தேதி நிகழ்ந்த சம்பவத்திலிருந்து போலீசார் பாதுகாப்பிற்கு கிராமத்தில் இருந்து வருகிறார்கள்.

ஆனால் சாதி இந்துக்கள் அருந்ததியர் குடியிருப்பிற்குள் புகுந்து தாக்குதல் நடத்தி முடிக்கும் வரை போலீசார் எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல், சாதி இந்துக்களுக்கு ஆதரவாகவே இருந்துள்ளார்கள். சாதி இந்துக்களின் தாக்குதலில் காயமடைந்த தலித் மக்களுக்கு மருத்துவமனையில் உரிய சிகிச்சை அளிக்கப்படவில்லை என்பதையும், அடிபட்டு வந்தபோது முதலுதவி செய்து உடனே அனுப்பும் முயற்சி நடந்துள்ளது என்பதையும், அதன்பின்பு கடுமையான வற்புறுத்தலுக்கு பின்புதான் உள்ளிருப்பு நோயாளியாக வைத்து சிகிச்சை அளிக்க தொடங்கியுள்ளார்கள் என்பதையும் அறிய முடிந்தது.
இரட்டை டம்ளர் முறையை நீக்கக் கோரி காவல் நிலையத்தில் கொடுத்ததற்காக தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த அருந்ததியர்கள் மக்களையும், அவர்களது வீடுகளையும் அடித்து உடைத்த சாதி இந்துக்கள், ‘‘அருந்ததியர்கள் சின்னான்டவர் கோயில் பூட்டை உடைத்து நுழைய முயன்றார்கள். தடுத்தத்ற்காக எங்களைத் தாக்கினார்கள்’’ என்று அப்பாவி தலித்துகள் மீது பொய்புகார் கொடுத்து, பொய் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
சாதி இந்துக்களால் மீண்டும் தாக்கப்படலாம், அல்லது தொடர்ந்து தாக்கப்படுவோம் என்ற அச்சத்தின் காரணமாக பல அருந்தியர் குடும்பங்கள் ஊரைவிட்டு வெளியேறிக்கொண்டிருக்கின்றனர்.
பள்ளியில் பயிலும் அருந்ததியர் சமூகத்தைச் சேர்ந்த சுமார் 70 மாணவ, மாணவிகள், சாதி இந்து மாணவர்களால் தாக்கப்படலாம் என்பதால் பள்ளிக்குச் செல்லவில்லை என்பதையும், கடந்த 18.02.07 அன்று அருந்ததியர் சமூகத்தைச் சேர்ந்த மாணவ, மாணவிகளை சாதி இந்து மாணவர்கள் தாக்கியுள்ளனர் என்பதையும், நடுநிலைப்பள்ளி வளாகத்தில் உள்ள அங்கன்வாடியில் சாதி இந்து சமூகத்தைச் சேர்ந்த 4 குழந்தைகள் மட்டுமே வந்திருந்தனர் என்பதையும் அறிந்தோம்.
மேற்படி நடுநிலைப்பள்ளியில் பயில்கின்ற அருந்ததியர் சமூகத்தைச் சேர்ந்த மாணவர்கள் மதிய சத்துணவு சாப்பாட்டை, வகுப்பறைகளின் வெளி வராண்டாவில் அமர்ந்துதான் சாப்பிடுகிறார்கள். அனைவரும் அங்குதான் செருப்புகளை விட்டு வைக்கின்றார்கள். அந்த செருப்புகளின் அருகில் அமர்ந்துதான் தலித் மாணவர்கள் சாப்பிடுகிறார்கள். சாதி இந்து மாணவர்கள் வகுப்பறைகளின் உள்ளே வசதியாக உட்கார்ந்து சாப்பிடுகிறார்கள்.

கடந்த 20.02.08 அன்று மேற்படி கிராமத்தைப் பார்வையிட சென்ற மாவட்ட ஆட்சியர் திரு. நீரஜ் மித்தல் அவர்கள், பாதிக்கப்பட்ட தலித் குடியிருப்பை சில நிமிடங்கள் மட்டும் பார்வையிட்டு, தங்கள் குறைகளை முறையிட வந்த தலித் மக்களிடம் ஓரிரு நிமிடங்கள் மட்டும் பேசி, தொடர்ந்து மக்கள் பேசுவதற்குள் கிளம்பி, சாதி இந்துக்களின் பகுதிக்கு சென்று, அங்கங்கே நின்று வேடிக்கைப் பார்த்துக்கொண்டிருந்த சாதி இந்துக்களை அவராகவே அழைத்து பேசத்தொடங்கினார். அப்போது சாதி இந்து சமூகத்தைச் சேர்ந்த ஒருவர், ‘‘இனிமேல் டீ கடைகளில் அவங்களூக்கு(தலித் மக்களுக்கு) பிளாஸ்டிக் டம்ளரில் டீ தருகிறோம். சின்னான்டவர் கோயிலுக்குள் விடமுடியாது. சமுதாயக்கூடத்தில் வருவதற்கு வேண்டுமானால் ஊர்க்கூட்டம் போட்டு பேசிவிட்டு சொல்கிறோம்’’ என்று தாங்களே முன்வந்து தலித் மக்கள் மீது காட்டிவரும் சாதியப் பாகுபாட்டை ஒத்துக்கொண்டனர்.அப்போது மாவட்ட ஆட்சியர் அவர்களுடன், மாவட்ட காவல் கண்காணிப்பாளர், மாவட்ட வருவாய் அலுவலர், வட்டாட்சியர், வட்டார வளர்ச்சி அலுவலர் உள்ளிட்ட பல்வேறு அதிகாரிகள், அனைத்து பத்திரிகை மற்றும் தொலைக்காட்சி செய்தியாளர்கள், மனித உரிமை அமைப்பினர் ஆகியோர் உடனிருந்தனர்.
இனியேனும் அரசு... இவைகளைச் செய்யுமா? தமிழக அரசின் சமூக நீதி மற்றும் மனித உரிமை பிரிவில் உள்ள காவல் அதிகாரிகள் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் தேநீர் கடைகளில் டிஸ்போசல் கப் என்கிற ஒரு முறை மட்டுமே பயன்படுத்துகிற பிளாஸ்டி டம்ளரில் தேநீர் குடிக்க வைத்து, புகைப்படம் எடுத்து, இரட்டை டம்ளர் முறை இல்லை என பத்திரிக்கைளில் பிரச்சாரம் செய்து வருகின்றனர். மேற்படி சாளரப்பட்டி கிராமத்தில் இருந்த இரட்டை டம்ளர் முறையை தடுத்து நிறுத்தவேண்டும் என தாழ்த்தப்பட்ட சமூகத்து மக்கள் புகார் கொடுத்ததால், சாதி இந்துக்களால் மிகப்பெரிய வன்கொடுமைக்கு ஆளாக நேரிட்டது. எனவே, தமிழ அரசு உடனடியாக இரட்டை டம்ளர் முறை மூலம் தலித் மக்கள் மீது நிகழ்கின்ற தீண்டாமை வன்கொடுமையினை தடுத்து நிறுத்த புதிய சட்டம் இயற்றி, உடனடியாக அதை நடைமுறைப் படுத்த வேண்டும். மேற்படி இரட்டை டம்ளர் முறையை தடுக்க டிஸ்போசல் கப் என்கிற ஒரு முறை மட்டுமே பயன்படுத்துகிற பிளாஸ்டி டம்ளரில் தேநீர் கொடுத்து நவீன தீண்டாமை நிகழ்ந்து வருகிறது. அரசு தனிக்கவனம் செலுத்தி இந்த நவீன தீண்டாமையை தடுத்து நிறுத்தவேண்டும். மேலும் அவ்வாறு பிளாஸ்டிக் டம்ளரில் தேநீர் தரும் கடைக்காரர்கள் மீது சுற்றுச்சூழல் சட்டப்படி நடவடிக்கை எடுக்கவேண்டும்.

அருந்ததியர் உள் ஒதுக்கீடு அமலாகிறதா? ‘பானைச்சோறின் பருக்கை!’

‘சொன்னதைச் செய்வோம், செய்வதைச் சொல்வோம்’ என்ற உடன் பிறப்புகளின் தாரக மந்திரம் கால மாற் றத்தில் `சொல்லாததையும் செய்வோம்` என்று மருவியிருக்கிறது. ஆமாம், உண் மையில் கழக ஆட்சியில் எங்குமே அவர் கள் சொல்லாததைச் செய்வதுதான் அதி கம். ஏராளமான உதாரணங்கள் உண்டென் றாலும் பானைச் சோற்றின் பருக்கைபத மாய் அருந்ததியர் உள் இடஒதுக்கீடு படும்பாட்டை எடுத்துக் கொள்ளலாம்.

உள் இட ஒதுக்கீடு

காலம் காலமாய் ஒடுக்கப்பட்ட, இழிவுகளைச் சுமந்தே பழக்கப்பட்ட, அருந்ததியர் மக்களுக்கு ‘தாழ்த்தப் பட்டோர் ஒதுக்கீட்டில் உள் இட ஒதுக் கீடு வேண்டும்‘ என்ற கோரிக்கை சமீப ஆண்டுகளில் எழுப்பப்பட்டது. அத னைக் கையிலெடுத்து மார்க்சிஸ்ட் கட்சி, தீண்டாமை ஒழிப்பு முன்னணி மற்றும் அருந்ததியர் அமைப்புகள் தீவிரமாகக் களமிறங்கியதும் கோரிக்கை வலுவடைந் தது. அரசு ஜனார்த்தனன் கமிஷனை அமைத்து ஆய்வு செய்தது. தாழ்த்தப் பட்டோரின் 18 விழுக்காடு இட ஒதுக்கீட்டில் 3 விழுக்காடு அருந்ததியர் மக்களுக்கு உள் இடஒதுக்கீடு வழங்குவதாக 2009 மார்ச் சில் அரசு அறிவித்தது. அதே ஆண்டு மே-29ல் அரசாணை பிறப்பித்தும் அமல் படுத்தியது. தமிழக அரசின் பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்தத்துறை (ஞ & ஹசு (மு)) தான் அரசாணை எண் : 65ம் வெளி யிட்டது. உடனே தமிழக முதல்வர் ‘உள் ஒதுக்கீடு கோரிக்கையை திமுக தலை வர் கருணாநிதி முதலமைச்சர் கருணா நிதியிடம் கோரிக்கை வைத்தார், முதல மைச்சர் கருணாநிதி நிறைவேற்றினார், என்று தனக்குத் தானே ஏற்பாடு செய்த பாராட்டு விழாவில் தன் முதுகில் தானே தட்டிக் கொடுத்துக் கொண்டார். வெள் ளைக் காகிதத்தில் ‘தேன்‘ என்று எழுதி னால் இனித்து விடுமா? ஆம், இன்றைய நடப்புகள் அப்படித்தான் ஆகிப் போனது.

மின்வாரிய ஷாக்!

உள்ஒதுக்கீடு அமலான அடுத்த மாதமே (ஜூன்-16, 09) தமிழ்நாடு மின் சார வாரியம் 1100 தொழில் நுட்ப உதவி யாளர் பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வு நடத்தியது. ஆனால் வேலை வாய்ப்பகத்தின் அறிவிப்பில் எஸ்.சி., அருந்ததியர் (எஸ்.சி.(ஏ).,) பிரிவு கோரப் படவில்லை. இதனை எதிர்த்து கோவை இளைஞர் சக்திவேல் உயர்நீதி மன்றத் தில் வழக்குப் போட்டார். நீதிபதி சந்துரு வும் (8.12.09) அருந்ததியர் உள்ஒதுக் கீட்டுப்படி தேர்வு செய்யவேண்டும் என்று உத்தரவிட்டிருக்கிறார். அதன் பின்னர் நீதிபதி வி. தனபாலனும் ஏப்ரல் 15, 2010ல் அதே போல் மின்சார வாரியத்திற்கு உத்தரவிட்டார். ஆனால் நீதிமன்ற உத்தரவும் கடலில் கரைத்த பெருங்காயம்தான். முன்னதாக தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் அளித்த பதிலில் தமிழ்நாடு மின்சார வாரியம் ‘வேலைவாய்ப்பகம் அளித்த பட்டியலில் எஸ்.சி.(ஏ) என்று தனியாக குறிப்பிட வில்லை, எனவே அருந்ததியருக்கான பட்டியல் தர இயலவில்லை என்று பதி லளித்துள்ளது. உண்மையென்னவென் றால் 1100 பேரில் 33 அருந்ததியர் பணி யிடங்கள் மின்வாரியத்தால் நிரப்பப்பட வில்லை, அங்கு உள்ஒதுக்கீடு கண்டு கொள்ளப்படவே இல்லை என்பதுதான். இது நீதிமன்ற அவமதிப்பும்கூட என் பதும் உண்மை.

அரசு போக்குவரத்து அநீதி!

அடுத்து தமிழ்நாடு அரசு போக்கு வரத்துக் கழகம் மாநிலம் முழுவதும் 250 உதவிப் பொறியாளர் பணியிடங்களை நிரப்ப மே-7,2010ல் நேர்முகத்தேர்வை நடத்தியது. இதில் எஸ்சி(ஏ) பிரிவில் மட் டும் எட்டு பேர் நிரப்பப்பட்டிருக்க வேண் டும். ஆனால் இங்கும் உள்இட ஒதுக்கீடு கணக்கில் கொள்ளப்படவில்லை. அதை விடக் கொடுமை, தன்னை நேர்முகத் தேர்வுக்கு அழைக்க வேண்டும் என்ற உத்தரவை உயர் நீதிமன்றத்தில் இந் தாண்டு மார்ச் 10ல் கோவையைச் சேர்ந்த லெனின் பெற்றார். ஜூலை-12ல் கோவை யில் நேர்முகத் தேர்விலும் பங்கேற்றார். சென்னை தரமணியில் உள்ள க்ஷடியசன டிக ஹயீயீசநனேடிளாiயீ கூசயiniபே உநவேசந ம் அக்டோ பர் 5ம் நாள் சான்றளித்துவிட்டது. ஆனா லும் கோவை அரசுப்போக்குவரத்துக் கழகம் 17 உதவிப் பொறியாளர்களில் 16 பேரை மட்டும் பதவியமர்த்திக் கொண் டது. எஸ்.சி.(ஏ). பிரிவில் சேர்க்க வேண் டிய லெனினை மட்டும் கடந்த எட்டு மாதங்களாக அல்லாட விடுகிறது. தமிழ கம் முழுவதும் நிரப்பவேண்டிய எட்டு அருந்ததியர் பணியிடங்களும் நிரப்பப் படவில்லை என்பதே உண்மை.

மாநகராட்சி என்ன செய்யும்?

இப்போது கோவை மாநகராட்சி, 40 இளநிலை உதவியாளர் மற்றும் தட்டச்சர் பணியிடங்கள் நிரப்ப இருக்கிறது. இதற் காக கோவை மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகம் கடந்த மாதம் 30 மற்றும் டிசம்பர்-6 ஆகிய இரு தேதிகளில் சான்றிதழ் சரிபார்ப்பிற்கு அறிவிப்பு வெளி யிட்டது. முதல் அறிவிப்பில் ஏனோ பி.சி. (எம்) (முஸ்லிம் உள் இடஒதுக்கீடு) கேட் கப்பட்டது, அடுத்த அறிவிப்பில் அதுவும் இல்லை. அருந்ததியர் ஒதுக்கீடு எஸ்.சி.(ஏ) பிரிவு இரண்டிலுமே இல்லை. மாநகராட்சி அதிகாரிகளிடம் கேட்ட போது, “பணியிடங்கள் நிரப்ப வேண்டி யது குறித்து மட்டுமே வேலை வாய்ப்பகத் திற்கு தெரிவிப்போம். அவர்கள் தான் தகுதி இடஒதுக்கீடு என ஆராய்ந்து நிய மன பட்டியலை அளிப்பார்கள்” என்று நழுவினர். கோவை மாவட்ட வேலை வாய்ப்பக உதவி அலுவலர் மூர்த்தியிடம் கேட்டபோது, “எல்லாம் சட்டப்படி சரி யாகச் செய்வோம், தவறு நடக்க வாய்ப்பே இல்லை, முதல் முன்னுரிமை ளஉ(ஹ) தானே வரும்! அறிவிப்பில் இல்லாவிட் டால் என்ன?” என்கிறார்.

கேள்விகளின் அணி வகுப்பு

ஆனால் கேள்வி என்னவென்றால் அருந்ததியர் உள்ஒதுக்கீட்டுக்கு ளஉ(ஹ) என்று தனியாகப் பதிவு செய்கிறது வேலை வாய்ப்பகம். அதேபோன்று சான்றிதழ் சரி பார்ப்பு அழைப்பில், அறிவிப்பில் குறிப் பிடாவிட்டால் எப்படி பங்கேற்க முடியும்? தமிழ்நாடு அரசுப் போக்குவரத்து கழக உதவிப் பொறியாளர் நியமனம், தமிழ்நாடு மின்சார வாரிய தொழில்நுட்ப உதவியாளர் பணியிடங்களில் ளஉ(ஹ) குறித்த கேள் விக்கு, ‘வேலை வாய்ப்பகம் தனியாக குறிப்பிடவில்லை. எனவே பட்டியல் தரமுடியாது’ என்று ஏன் சொல்கிறார் கள்? உள் இடஒதுக்கீட்டை அமல் படுத்த மறுப்பது எந்தத்துறை? அரசின் ஆணை, உயர்நீதிமன்ற உத்தரவு என்று எதுவென்றாலும் அதைச்செல்லாக் காசாக்குவது யார்? அதிகாரவர்க்கமா? தமிழக அரசா? ஆண்டாண்டு காலமாய் அடக்கப்பட்ட, ஒடுக்கப்பட்ட அருந்ததி யர் சமூகம் இன்னும் ஏன் அலைக் கழிக்கப்படுகிறது? என்று கேள்விகள் அணிவகுக்கின்றன. இப்போதுதான் கழகக் கண்மணிகளின் ‘சொல்லாததை யும் செய்யும் தாரக மந்திரம் அமலாவது நமக்குப் புரிகிறது.

ஏட்டுச்சுரைக்காயோ?

செருப்புத் தைத்தல், துப்புரவுசெய் தல், சாக்கடைச் சுத்தம், பிணம் எரித்தல் போன்ற இழி தொழில்தான் அருந்ததியர் தலையெழுத்து, வேறுபணிக்கு விடமாட் டோம் என்று அதிகாரிகள் சதி செய்கிறார் களோ? அரசையும் ஏமாற்றுகிறார்களோ? என்று எண்ணவும் தோன்றுகிறது. ‘ஏட்டுச்சுரைக்காய் எப்படி கறிக்கு உத வாதோ’ அப்படி அருந்ததியருக்கும் 3 விழுக் காடு உள் இடஒதுக்கீடு என்று அறிவித் தால் மட்டும் போதாது. தொடர்ந்து அரசு நிர்வாகங்களோடு சட்டரீதியாகப் போரா டும் கோவை சிங்கையைச் சேர்ந்த லெனின் “போங்க சார், உள்ஒதுக்கீடு என்பதெல்லாம் சும்மா, வெறும் டிராமா” என்று வேதனையில் கொந்தளிக்கிறார். க்ஷநு.,(ஆநாயniஉயட நுபேநநேநசiபே) என்ற தர மான தொழிற்படிப்பு, தொழிற்பயிற்சி பழகு நர் பட்டயம் பெற்ற தனக்கே வேலை இல்லை. அரசு நிர்வாகங்களுடன் போரா டியும் நீதிமன்ற உத்தரவுகளைப் பெற்றும் பயனில்லை என்று வேதனையோடு அர சின் உள்ஒதுக்கீடு அமலாகாதததின் கண் முன் காட்சியாகவும் நம்முன் நிற்கிறார்.

சத்திய ஆவேசம்!

இந்த நிலையில் உள்ஒதுக்கீட்டுக் காகப் போராடிய தீண்டாமை ஒழிப்பு முன் னணி, அதை அமலாக்கவும், ‘உள்ஒதுக் கீட்டுக்கு சட்டப்பூர்வமான பாதுகாப்பு வழங்கு!’ என்ற முழக்கத்தோடு தமிழகத் தின் சென்னை, கோவை, மதுரை உள் ளிட்ட 20 மையங்களில் டிசம்பர்-19ல் ஆர்பாட்டங்களை நடத்த உள்ளது.

தமிழகத்தில் இதுநாள் வரை அரசு பதவி, பணியிடம் எங்கும் ஒடுக்கப்பட்ட தலித் அருந்ததியர் தங்கள் உரிமை கேட்டு நிற்கிறார்கள். கடந்தாண்டு மருத் துவ கல்விக்கு 56 பேர், பொறியியல் படிப் புக்கு 1,165 பேர் அருந்ததிய மாணவர்கள் காலடி எடுத்து வைத்தது மகிழ்ச்சிதான்.

அதே நேரத்தில் கடந்த 2009 மார்ச் சுக்குப்பின் மின்வாரிய தொழிநுட்ப உத வியாளர், அரசுப் போக்குவரத்து உதவிப் பொறியாளர், காவலர்கள் தேர்வு என்ற அரசுத்துறை பணியிடங்களில் ஏன் உள் ஒதுக்கீடு அம லாகவில்லை? என்று சத் திய ஆவேசத் தோடு மார்க்சிஸ்ட் கட்சி யும், தீண்டாமை ஒழிப்பு முன்னணியும் கேட்கும் கேள் விக்கு அரசு பதில் சொல் லியே ஆக வேண்டும்.

“ ஏந்திய கொள்கையார் சீறின் இடைமுரிந்து
   வேந்தனும் வேந்து கெடும்”                       - குறள்

என்ற அய்யனின் வாக்கும் ஆட்சி யாளர்கள் அறியாததல்ல. நெடுங்காலமாய் நீதிகேட்டு நிற்கும் அருந்ததியருக்கு உள்ஒதுக்கீட்டை முறையாக அமலாக்கு வது அரசின் கைகளில் தான் உள்ளது. செய்வார்களா? (

-எம்.சக்தி

அருந்ததியர் உள் ஒதுக்கீடு மசோதா நிறைவேற்றம்

சென்னை: தமிழகத்தில் அருந்ததியருக்கான உள் ஒதுக்கீடு மசோதா நிறைவேறியுள்ளது. இதன்மூலம் ஆதிதிராவிடரகளுக்கு வழங்கப்பட்டு வரும் 18 சதவீத ஒதுக்கீட்டில் 3 சதவீதம் அருந்ததியருக்கு உள் ஒதுக்கீடு செய்யப்படும்.

அருந்ததியர் உள் ஒதுக்கீடு சட்டத்தின் முன்வடிவை நேற்று சட்டசபையில் கொண்டு வந்த தமிழக உள்ளாட்சி துறை அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசுகையில்,

சென்னை உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதி எம்.எஸ். ஜனார்த்தனம் தலைமையில் அருந்ததியர்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்குவது குறித்து பரிந்துரை செய்ய ஒரு நபர் குழு கடந்த ஆண்டு மார்ச் 25ம் தேதி அமைக்கப்பட்டது.

இது குறித்து விரிவாக ஆய்வு செய்த குழுத் தலைவர், அருந்ததியர், சக்கிலியர், மாதாரி, ஆதிஆந்திரர், பகடை, மடிகா, தோட்டி ஆகிய பிரிவினரை உள்ளடக்கிய அருந்ததியர்களுக்கு அவர்களின் மக்கள் தொகை அடிப்படையில் ஒதுக்கீடு வழங்க பரிந்துரை செய்தார்.

2001ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி தமிழகத்தில் தாழ்த்தப்பட்ட மக்கள் தொகை 1 கோடியே 18 லட்சத்து 57 ஆயிரத்து 504. அதில் அருந்ததியர்களின் எண்ணிக்கை 18 லட்சத்து 61 ஆயிரத்து 457. அதாவது மொத்த தாழ்த்தப்பட்ட மக்கள் தொகையில் 15.7 சதவீதமாகும்.

இதனால் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு வழங்கப்படும் 18 சதவீத ஒதுக்கீட்டுக்குள் அருந்ததியினருக்கு 3 சதவீதம் உள் ஒதுக்கீடு வழங்கலாம் என ஜனார்த்தனம் குழு பரிந்துரைத்தது.

இந்தப் பரிந்துரை கடந்த ஆண்டு நவம்பர் 27ம் தேதி நடந்த தமிழக அமைச்சரவைக் கூட்டத்தில் விவாதத்துக்கு கொண்டு வந்து ஏற்றுக் கொள்ளப்பட்டது. இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 338 (9) பிரிவின் கீழ் தேசிய ஆதிதிராவிடர் ஆணையத்துடன் ஆலோசிக்கப்பட்டது.

இப்படி சட்டரீதியான நடவடிக்கைகள் அனைத்தையும் படிப்படியாக நிறைவேற்றிய பிறகுதான் இந்த சட்டமுன்வடிவு பேரவையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

அருந்ததியர்கள் மாற்றுத் தொழிலில் ஈடுபட உதவுவதற்காக ரூ. 22 கோடியில் மறுவாழ்வு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த பட்ஜெட்டில் அறிவித்தபடி துப்புரவுப் பணியாளர்கள் கழிவுநீர் குழாய்களில் இறங்குவதைத் தவிர்க்க சென்னை மாநகராட்சி மற்றும் 9 நகராட்சிகளில் ரூ. 6.3 கோடி செலவில் அடைப்புகளை அகற்றும் இயந்திரங்கள் வாங்கப்படும்.

தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினருக்கான ஒதுக்கீட்டை 16லிருந்து 18 சதவீதமாகவும், பிற்படுத்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீட்டை 25லிருந்து 31 சதவீதமாகவும் உயர்த்தியவர்கள் நாங்கள்.

அருந்ததியர்களை உயர்த்துவதில் அனைவரும் ஒன்றுபட்டுள்ளோம் என்பதை உணர்த்தும் வகையில் இந்த சட்ட முன்வடிவை ஒருமனதாக நிறைவேற்றித் தர வேண்டும்.

கருணாநிதி கடிதம்...:

இந்த மசோதாவை முதல்வர் தானே வந்து முன்மொழிவதாக இருந்தார். ஆனால் டாக்டர்களின் அறிவுரை காரணமாக அவர் வரமுடியாமல் போய்விட்டது. அதனால் தனது உள்ளத்து உணர்வுகளை வெளிப்படுத்தி ஒரு கடிதமாக அனுப்பியுள்ளார். அதில்,

இன்று என் வாழ்வில் ஒரு முக்கியமான நாள். ஆம், அருந்ததியர் சமுதாய மக்களுக்கு இட ஒதுக்கீடு மசோதா சட்டமன்றத்திலே நிறைவேறுகின்ற நாள்.

இந்த நாளில் சட்டசபை வந்து இந்த மசோதாவை நானே முன்மொழிந்து நிறைவேற்றித் தரவேண்டும் என எண்ணியிருந்தேன். சட்டசபைக்கு வருவதாக இருந்தது. ஆனால், டெல்லி டாக்டரும், சென்னை டாக்டர் நண்பர்கள் குழுவும் அளித்த அறிவுரையாலும் அச்சுறுத்தலாலும் வர இயலவில்லை. மன்னிக்க வேண்டுகிறேன்.

எனினும் இன்று காலையில் நானே அருந்ததியர் மசோதாவினை அவையிலே முன்மொழிவதற்கான உரையை என் கைப்பட எழுதி அவையிலே அதனை படிக்குமாறு உள்ளாட்சித்துறை அமைச்சருக்கு அனுப்பி வைத்து எனக்கு பதிலாக இந்த மசோதாவினை அவரை முன்மொழியுமாறு கேட்டுக்கொண்டேன்.

கருத்து மாறுபாடுகளுக்கிடையிலேயும் நீங்கள் காட்டும் கனிவு. இன்று நம்மை மீண்டும் இணைக்கிறது. தமிழ்த்தாயின் கரம் நம்மை ஒரு சேர அணைக்கிறது. அறிவியக்கம், ஆன்மிகம், நாத்தீகம் மற்றும் ஆத்திகம் இந்த வேறுபாடுகள் மாறுபாடுகள் கடந்த நன்றியுணர்வையும் நன் மனித நேயமும் வளர்த்திடுவோம்.

அருந்ததியினருக்கான இந்த இட ஒதுக்கீடு செய்யப்பட வேண்டுமென்ற எனது உள்ளத்தின் அடித்தளத்தில் நீண்ட பல ஆண்டுகளாக இருந்து அதனை சட்டமாக நிறைவேற்றுகின்ற நேரம் இப்போதுதான் வந்துள்ளது.

இந்த சட்டத்தின் காரணமாக சமுதாயத்தின் அடித்தளத்திலே இருக்கின்ற அந்த அருந்ததிய மக்கள் நாளை, நாளை மறுநாள் அவர்களும் வாழ்க்கையிலே வளம் பெறுவார்களேயானால், அன்று தான் என்னுடைய உள்ள வேட்கை முழுவதுமாக நிறைவேறிய திருப்தி எனக்கு ஏற்படும். இதனை சட்டமாக கொண்டு வருவதற்குள் நான் பட்ட பாட்டினை நான்தான் அறிவேன்.

இதற்காக நீதியரசர் எம்.எஸ்.ஜனார்த்தனம் தலைமையிலே ஒரு குழுவினை அமைத்து, அல்லும், பகலும் பாடுபட்டு இது சம்பந்தமான பல சட்டப் பிரிவுகளையும் படித்தாய்ந்து இதற்கான அறிக்கையினை அரசுக்கு அளித்தார்கள்.

அதன்பிறகு இதனை சட்டமாக கொண்டு வருவதற்கான முயற்சிகளில் ஈடுபட்டு, அரசு உயர் அதிகாரிகள் சிலரிடம் இது குறித்து நான் பேசிக் கொண்டிருந்த போது, அவர்கள் இந்த சட்டத்தினை கொண்டு வருவதற்கு மேலும் சில கால நீடிப்பு தேவை என்று கூறினார்கள். அப்போது நான் அவர்களிடம் கூறினேன். இது என்னுடைய சொந்தப்பிரச்சினை.

இது எவ்வளவுக்கெவ்வளவு விரைவில் நிறைவேறுகிறதோ, அந்த அளவிற்கு நான் மகிழ்ச்சி அடைவேன். எனவே இந்த மசோதா இந்த கூட்டத்தொடரிலேயே நிறைவேற வேண்டுமென்று கேட்டுக்கொண்டேன். அவ்வாறே இது நிறைவேறுகிறது.

நீதியரசர் ஜனார்த்தனம் இது குறித்த பரிந்துரைகளை அரசிடம் தாக்கல் செய்து, அந்த செய்தி ஏடுகளில் வெளிவந்த நேரத்தில்- இந்த அருந்ததியர் சமுதாயத்தை சேர்ந்த சுமார் 50 பேர் என்னை தலைமை செயலகத்தில் வந்து சந்தித்தார்கள்.

அப்போது அவர்களிடம் நான் பேசிக் கொண்டிருந்த போது, எங்கள் சமுதாயத்திற்காக இவ்வளவு உறுதியாக இதுவரை யாரும் செயல்பட்டதில்லை.

ஆனால் நீங்கள் இந்த அளவிற்கு எங்களுக்காக எடுத்துக்கொள்ளும் முயற்சிகளுக்காக நாங்கள் என்ன கைமாறு செய்யப் போகிறோமோ? எது எப்படியிருந்தாலும் இந்த பரிந்துரைகளை ஏற்று இடஒதுக்கீடு செய்து அது சட்டமாக வர நாங்கள் உங்களோடு துணை இருப்போம் என்று தெரிவித்தார்கள்.

அவர்களின் எண்ணப்படி இன்றையதினம் அருந்ததிய சமுதாயத்தினருக்காக 3 சதவீத உள்ஒதுக்கீடு நிறைவேறுகிறது. இந்த நாள் அவர்கள் வாழ்நாளில் எந்த அளவிற்கு முக்கியமான நாளாக விளங்குமோ, அது போலவே என்னுடைய வாழ்வில் இந்த சட்டத்தைக் கொண்டு வருவதற்கு காரணமானவன் நான் என்ற முறையில் எனக்கு மகிழ்ச்சியை தருகின்றது.

என் முதுகுதண்டில் அறுவை சிகிச்சை செய்து கொண்டு, காயம் பரிபூரணமாக குணம் ஆனதில் எந்த அளவிற்கு நான் மகிழ்ச்சி அடைந்திருக்கின்றேனோ, அதைவிட அதிக அளவிற்கு அருந்ததிய சமுதாயத்திற்காக நடைபெற்றுள்ள சமூகநீதி அறுவை சிகிச்சையில் இன்று முதல் அந்த சமுதாயமே பெரிதும் நலம் அடையப்போகின்றது என்ற எண்ணத்தோடு மகிழ்ச்சி அடைகின்றன.

அருந்ததியர்களுக்கான நல்வாழ்வை அளித்திடக் கூடிய இந்த மசோதாவை சட்டமாக ஆக்கிட உதவி செய்த அத்தனை சட்டமன்ற உறுப்பினர்களுக்கும், இந்த சட்டம் வெளிவர பெரிதும் எனக்கு துணையாக நின்ற நீதியரசர் எம்.எஸ்.ஜனார்த்தனம் அவர்களுக்கும் எனது நன்றியினைத் தெரிவித்துக்கொள்கிறேன் என முதல்வர் கருணாநிதி எழுதியுள்ளார் என அந்த கடிதத்தை ஸ்டாலின் வாசித்து முடித்தார்.


இதையடுத்து சட்ட முன்வடிவு சட்டசபையில் குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேறியது



THANKS TO KALAINGAR Dr.M.KARUNANITHI

அருந்ததியருக்கு தாழ்த்தப்பட்டோர் கோட்டாவில் 3 % உள் இடஒதுக்கீடு

சென்னை: அருந்ததிய இன மக்களுக்கு தாழ்த்தப்பட்ட மக்களுக்கான இட ஒதுக்கீட்டிலிருந்து 3 சதவீத தனி ஒதுக்கீடு வழங்கப்படும் என முதல்வர் கருணாநிதி கூறினார்.

சென்னை சாந்தோம் கலைத் தொடர்பு நிறுவனம் வழங்கிய வாழ்நாள் சாதனையாளர் விருதை பெற்றுக் கொண்டு கருணாநிதி பேசுகையில்,

நான் செய்த சாதனைகளால் ஒரு கோடீஸ்வரர், முன்பு கட்டியிருந்த வீட்டை விட இன்னும் நான்கு மாடி வைத்து வீட்டைக் கட்டியிருக்கிறார் என்றால்- அது என்னுடைய சாதனை அல்ல. எனக்கு ஏற்பட்ட சோதனைகளிலே ஒன்று. நான் அடைகின்ற வேதனைகளிலே ஒன்று. அதல்ல சாதனை.

பொட்டுப் பூச்சிகளாய், புன்மைத் தேரைகளாய், புழுக்களாய் இந்த உலகத்திலே ஏன் இந்த நாட்டிலே வாழுகின்ற ஏழையெளிய மக்கள், ஊனமுற்ற மக்கள், குருடாகிப் போன மக்கள், ஊமைகளாய் வாழ்கின்ற மக்கள் -அந்த மக்களுக்கெல்லாம் நல்லுயிர் கொடுத்து, நல்வாழ்வளித்து, அவர்களை நடமாடச் செய்வதை விட பெரிய சாதனை ஒன்றும் இருக்க முடியாது என்பதை கிருஸ்துவ மக்கள் கூடியிருக்கின்ற இந்த இடத்தில் சொல்வதைக் காட்டிலும் வேறு இடம் பொருத்தமாக இருக்க இயலாது.

என்னை ஆளாக்கிய தலைவர், அறிஞர் அண்ணா, 1969ம் ஆண்டு மறைந்த பிறகு, அந்தப் பொறுப்பு என் மீது திணிக்கப்பட்டு அந்தப் பொறுப்பையேற்று மக்கள் தொண்டனாக நான் ஆட்சிக்கு வந்த பிறகு, தமிழகத்தில், இந்தியாவிலே எந்த மாநிலத்திலும் இல்லாத அளவிற்கு, கண்ணெளி முகாம்கள், கிராமத்திற்கு கிராமம், ஆயிரக் கணக்கான கிராமங்களில் நடத்தப்பட்டு, லட்சக்கணக்கான கண் பார்வை இழந்த மக்களுக்கு கண்ணொளி வழங்கிய நிகழ்ச்சி, கண்ணொளி திட்ட நிகழ்ச்சி நடைபெற்றது.

அந்தத் திட்டம் கூட எப்படி என் சிந்தையிலே உதித்தது என்றால் - நானே விபத்து ஒன்றில் சிக்கி, கண் சிகிச்சைக்காக அமெரிக்கா சென்றிருந்த போது நான் தங்கியிருந்த மருத்துவமனைக்குப் பக்கத்தில் அந்த நாட்டு மருத்துவர்கள் ஒன்று கூடி, பல முனைகளில் ஏழையெளிய மக்களுக்கு கண்ணொளி வழங்குகின்ற திட்டத்தை நிறைவேற்றிக் கொண்டிருந்ததைக் கண்டேன்.

வேங்கடசாமி என்ற ஒரு கிருஸ்துவ நண்பர்தான் என்னோடு வந்த மருத்துவர். இதையே தமிழகத்தில் அரசின் சார்பாக ஏன் நடத்தக் கூடாது என்று அவர் கேட்டார். அப்போது நல்வாழ்வுத் துறை அமைச்சராக பேராசிரியர் அன்பழகனார் இருந்தார். அவரோடு கலந்து பேசி நாங்கள் இருவரும் சேர்ந்து தயாரித்த அரசின் திட்டம் தான் கண்ணொளி வழங்கும் திட்டம்.

லட்சக்கணக்கான மக்களுக்கு கண்ணொளி வழங்கிய திட்டம். நீங்கள் சொல்கின்ற சாதனைகளில் முதல் தரமான சாதனையாக அதைச் சேர்த்துக் கொள்ளலாம். இன்றைக்கும் அந்தச் சாதனை தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது.

அதே போல பிச்சைக்காரர் மறுவாழ்வுத் திட்டத்தை கொண்டு வந்து ஒவ்வொரு மாவட்டத்தின் தலைநகரங்களிலும் பிச்சைக்காரர் மறுவாழ்வு இல்லங்களை அதிலும் குறிப்பாக தொழுநோய் பிச்சைக்காரர் மறுவாழ்வு இல்லங்கள் தொடங்கப்பட்டு இன்றைக்கும் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.

சென்னையிலே இருந்த 5000 கை ரிக்ஷாக் களையும், மதுரை, கடலூர் போன்ற இடங்களில் இருந்த கை ரிக்ஷாக் களையும் ஒழித்து விட்டு அதனை இழுத்தவர்களுக்கெல்லாம் பிழைப்புக்கு வழி காட்ட வேண்டுமென்பதற்காக அவர்களுக்கெல்லாம் இலவசமாக சைக்கிள் ரிக்ஷா கொடுத்த ஆட்சி தான் என்னுடைய தலைமையிலே அமைந்த ஆட்சி.

அந்தச் சாதனைகளின் வரிசையில் இன்னமும் வாய் திறந்திருந்தாலுங்கூட, பேச முடியாத, அழுத்திப் பேச முடியாத, உரிமை இல்லாத, அடிமைத்தனம் மிகுந்த மக்கள் நாட்டிலே இருக்கின்றார்கள்.

சிறுபான்மை மக்கள் கிருஸ்துவ மக்கள், இஸ்லாமிய மக்கள் எங்களுக்கு இட ஒதுக்கீடு வேண்டும், எங்களுக்கு கல்வியில் உத்தியோகத்தில் உரிய இடம் தேவை என்று சொல்லி, அவர்கள் கோரிக்கை வைத்ததும், இல்லையென்று சொல்லாமல், இஸ்லாமியர்களுக்கு 3.5 சதவிகிதம், கிருஸ்துவர்களுக்கு 3.5 சதவீதம் என்று இட ஒதுக்கீடு வழங்கப்பட்டது.

பத்து நாளைக்குப் பிறகு திரும்ப வந்து பீட்டரும், சின்னதுரையும் ஏற்கனவே எங்களுக்கு இந்த உரிமைகள் எல்லாம் கிடைத்திருக்கின்றன, இன்னமும் கிடைக்கவிருக்கின்றன, நீங்கள் அளித்துள்ள சலுகையினால் எங்களுக்கு நன்மை இல்லாவிட்டாலும் தீமை வராமல் இருக்க வேண்டுமல்லவா? ஆகவே இந்தச் சலுகையை நீங்கள் திரும்பப் பெற்றுக் கொள்ளுங்கள் என்றார்கள். கணக்கிட்டுப் பார்த்தோம், சிந்தித்துப் பார்த்தோம், விவாதித்துப் பார்த்தோம்.

அவசரப்படவில்லை, ஒரு நாள், இரண்டு நாள் விவாதித்து அதற்குப் பிறகு பீட்டரும், சின்னதுரையும் மாத்திரம் சொன்னால் போதாதென்று, ஆயர் பெருமக்கள் அனைவரையும் அழைத்து பேசினோம். அவர்கள் யாருக்காவது மாறுபட்ட கருத்து இருக்கிறதா என்பதை அறிந்து கொள்ள விசாரித்தோம்.

ஒருவருக்கு மாறுபட்ட கருத்து இருந்தாலும், அதை மீறி நான் நடக்க முடியாது என்ற காரணத்தால், அத்தனை பேருடைய எண்ணத்தையும் அறிந்து இன்றுள்ள, அதே பழைய நிலையிலேயே அவர்களை 3.5 சதவிகிதம் என்ற அந்தச் சலுகையைத் திரும்பப் பெற்று, பழைய நிலையிலேயே அவர்களை வைத்திருக்கிறோம்.

கடைசியாக ஒன்றைச் சொல்ல விரும்புகிறேன். அருந்ததியர் சமுதாயம் தங்களுக்கு தனி இட ஒதுக்கீடு வேண்டுமென்று கேட்டார்கள். அதற்காக நீதியரசர் ஜனார்த்தனம் குழு அமைக்கப்பட்டு அது குறித்த அறிக்கையைத் தந்திருக்கிறார். அந்த அறிக்கையை இன்னும் இரண்டொரு நாளில் கூடுகின்ற அமைச்சரவை கூட்டத்திலே ஆலோசித்து, விவாதித்து, அந்தச் சமுதாயத்திற்குத் தேவையான சலுகையை இந்த அரசு அளிக்கவிருக்கிறது என்ற மகிழ்ச்சிகரமான செய்தியை தெரிவித்துக் கொள்கிறேன்.

அரசு செயலாளர்கள் என்னிடம் பேசும்போது, இப்போதே இதைச் செய்ய வேண்டுமா என்றார்கள். அப்போது நான் சொன்னேன். கீழான மக்கள், கேவலப்படுத்தப்படும் மக்கள், புழுக்களாய் நெளிந்து கொண்டிருக்கின்ற மக்கள், மனிதனைப் பார்த்து மனிதனே மதிக்காத அளவிற்கு மட்டரகமாக ஆக்கப்பட்ட மக்கள் - அந்த மக்களைக் கைதூக்கி விடுவது தான் இந்தக் கருணாநிதியின் வேலை. இதைத்தான் நான் செய்து கொண்டிருக்கிறேன்.

அந்தச் சாதனையிலே, சரித்திரத்திலே இதுவரையில் இடம் பெறாமல் இருப்பது இந்த அருந்ததி மக்களுக்கு நாம் அன்பு காட்டி அவர்களை கை தூக்கி விடாமல் இருப்பது தான், நான் என்னுடைய சரித்திரத்தில் கடைசியாகவாவது, கடைசிப் பக்கத்தில் எழுத வேண்டிய, அச்சடிக்கப் பட வேண்டிய செய்தி, அருந்ததியர்களுக்கு சமூக நீதி அளித்தேன் என்ற அந்தச் செய்தி இடம் பெற வேண்டுமென்று சொன்னேன். அந்தச் சாதனையும் முற்றுப் பெறவிருக்கிறது என்றார் கருணாநிதி.

அருந்ததிய இனத்தில் சக்கிலியர், மதாரி, ஆதி ஆந்திரர், பகடை, மடிகா, தோட்டி ஆகிய சமூகங்கள் அடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

ஒடுக்கப்பட்ட இந்த சமுதாய மக்கள் நீண்ட காலமாகவே தங்களுக்கு தனி உள் இட ஒதுக்கீடு கோரி வருவது குறிப்பிடத்தக்கது.

கோயிலில் பூஜை செய்த அருந்ததியர்களுக்கு அடி, உதை, அபராதம்

விழுப்புரம்: விழுப்புரம் அருகே கோயிலில் பூஜை செய்த அருந்ததியர்களுக்கு அடி, உதை விழுந்தது. மேலும் அவர்களுக்கு அபராதமும் விதிக்கப்பட்டது.

விழுப்புரம் மாவட்டம் அருகே உள்ள பள்ளிப்பட்டு கிராமத்தில் சுமார் 30 அருந்ததியர் குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.

ஊருக்கு வடக்கே உள்ள அய்யனார் கோயில் சிவராத்திரி அன்று இரவில் பூஜை செய்தால் உடல் குணமாகும் என்று கூறி இக்கிராமத்தில் வசிக்கும் அருந்ததியர் வகுப்பைச் சேர்ந்த கலியன் மகன் வீரமுத்து, தொட்டியம் கிராமத்தைச் சேர்ந்த மூக்கன் மகன் கோவிந்தராஜ், பூசாரி, அவருடன் வந்த 2 பெண்கள், ஒரு ஆண் உள்பட 6 பேர் அய்யனார் கோயிலுக்கு சென்று இரவு பூஜை செய்துள்ளனர்.

இதையறிந்த ஒரு தரப்பினர் பூசை செய்த 6 பேரையும் இழுத்து வந்து ஊரில் உள்ள மாரியம்மன் கோயில் தூண்களில் கட்டிவைத்து விடிய விடிய அடித்தும், எச்சில் துப்பியும் சித்ரவதை செய்து அவமானப்படுத்தியுள்ளனர்.

பிப்.24 அன்று காலை 6 மணியளவில் ரூ.50 ஆயிரம் அபராதம் விதித்து, அவர்களிடமிருந்த நகைகளையும் ரூ.2000 பணத்தையும் பறித்துக் கொண்டு அனுப்பியுள்ளனர்.

இந்த சம்பவத்தை வெளியில் சொல்லக் கூடாது என்று பாதிக்கப்பட்டவர்களிடம் எழுதி வாங்கி கொண்டு அனுப்பியுள்ளனர்.

இந்த சம்பவம் குறித்து பாதிக்கப்பட்ட நபர்களில் ஒருவரான கோவிந்த ராஜ் தியாகதுருகம் இன்ஸ்பெக்டர் மற்றும் காவல் விழுப்புரம் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் ஆகியோரிடம் புகார் மனு அளித்துள்ளார்.

இந்த பிரச்சனையில் தமிழக முதல்வர் கருணாநிதி நேரடியாக கவனம் செலுத்த வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயலாளர் ஆனந்தன் தமிழக முதல்வர் கருணாநிதிக்கு கடிதம் எழுதியுள்ளார்.

அருந்ததியர் இனமும் துப்புரவுப் பணியும்



கோ.ஜெயராஜ்,
நிர்வாக அற்ங்காவலர்,
அன்னை தெரசா ஊரக வளர்ச்சி அறக்கட்டளை, மதுரை.
மதுரைமாவட்டம் மற்றும் மதுரை நகர் பகுதியிலுள்ள துப்புரவுப் பணியாளர்களைப் பற்றியும் அவர்களின் வாழ்வு நிலை, கல்வி, பொருளாதாரம், அரசியல் விழிப்புணர்வு மற்றும் பிற சமூக மதிப்பு குறித்தும் மதுரையில் இருக்கும் அன்னை தெரசா ஊரக வளர்ச்சி அறக்கட்டளை ஆய்வு செய்துள்ளது. அந்த ஆய்வில் கண்டறியப்பட்ட சில முக்கியத் தகவல்கள்.
துப்புரவுப்பணியில் அருந்ததியர் சமுதாயத்தினர்
தற்போது துப்புரவுப் பணி என்பது பெரும்பான்மையாகத் தாழ்த்தப்பட்ட பட்டியல் இன மக்களில் அருந்ததியர் எனும் சமூகத்தைச் சேர்ந்த மக்களால் மட்டும் செய்து வரும் இழிவு நிலைத் தொழிலாகவே இருந்து வருகிறது. மதுரை நகரில் கடந்த 70 வருடங்களுக்கு முன் துப்புரவுப் பணிகளுக்கான வேலைகளை தாழ்த்தப்பட்ட பட்டியலினத்தைச் சேர்ந்த சுமார் இரண்டு சதவிகித மக்கள் தொகையைக் கொண்ட குறவர் எனும் பிரிவினர்  மட்டுமே செய்து வந்தனர்.  துப்புரவு சார்ந்த பணிகளைச் செய்வதால் அவர்களுக்கு வீடுகளில் கிடைக்கும் மீதமான உணவுகள், தெருக்களில் கிடைக்கும் எச்சில் இலை கழிவுகள் போன்றவற்றைக் கொண்டு துப்புரவுப் பணியுடன் பன்றி, ஆடு, மாடு போன்ற கால்நடைப் பிராணிகளையும் வளர்த்து வந்தனர்.

இந்நிலையில் மதுரை நகரில் மக்கள்தொகை பெருக்கம் காரணமாக குறைந்த மக்கள் தொகை கொண்ட குறவர் இன மக்களால் துப்புரவுப் பணியை முழுமையாகச் செய்திட முடியவில்லை. அச்சமயம் தாழ்த்தப்பட்ட பட்டியலினத்தைச் சேர்ந்த அருந்ததியர் என்று அழைக்கப்படும் சக்கிலியர் இன மக்கள் மதுரையைச் சுற்றிலுமுள்ள மாவட்டங்களில் விவசாயம், தோல் சம்பந்தமான தொழில்களைச் செய்து வந்தனர். அத்தொழிலில் சரியான வேலைவாய்ப்பில்லாத நிலையில் வாழ்க்கையை ஓட்டப் பிழைப்பைத் தேடி இந்த சமுதாயத்தினர் மதுரை நகர் நோக்கி வேலை தேடி வரத்துவங்கினர். 1940-ஆம் ஆண்டுக்குப் பின் வந்த காலத்தில் இவ்வின மக்கள் பெருமளவில் மதுரையை நோக்கி வந்தனர்.

இக்காலங்களில் கல்வி அறிவு பெறாத இவ்வின மக்களுக்கு மதுரை நகரில் உடனே கிடைத்த வேலைவாய்ப்பு துப்புரவு சார்ந்த பணிகள்தான். இவர்களுக்கு முன்பு இப்பணியை மதுரை முழுவதும் பிற தாழ்த்தப்பட்ட சமுகத்தினரும் செய்து வந்தனர். சுமார் 50 ஆண்டுகளுக்கு முன் துப்புரவுப் பணி செய்யும் தாழ்த்தப்பட்ட மக்களை கல்வி, பொருளாதாரம், அரசியல் விழிப்புணர்வு போன்றவற்றில் முன்னேற்றப் பாதைக்கு அழைத்துச் செல்வதாகக் கூறி பல்வேறு மத அமைப்புகள் செயல்படத் துவங்கின. அவர்களின் அப்போதைய பிரச்சாரம் நீங்கள் எங்கள் மதங்களைப் பின்பற்றுங்கள் உங்களுக்குக் கல்வி, உணவு, உடை, பொருளாதார முன்னேற்றம், அரசியல் விழிப்புணர்வு போன்ற அனைத்தையும் நாங்கள் இலவசமாகத் தருகிறோம் என்பதாகவே இருந்தது. தாழ்த்தப்பட்ட துப்புரவுப்பணி மற்றும் கடைநிலைக் கூலித்தொழில் செய்யும் மக்களிடம் பெருமளவில் இது போன்று பிரச்சாரம் செய்தனர். இதன் விளைவாகத் தாழ்த்தப்பட்ட பிரிவுகளில் மொத்தம் உள்ள 76 பிரிவுகளில் முக்கியமான மூன்று பிரிவு மக்களான பள்ளர், பறையர், அருந்ததியர் இன மக்களில் அருந்ததியர் என்று அழைக்கப்படும் சக்கிலியரைத் தவிர மற்ற இருபிரிவினர் உணவு, உடை, கல்வி போன்றவற்றைப் பெற்றுக் கொண்டு மதம் மாறினர். இந்த இரு பிரிவினர்களில் ஓரளவு வசதியுடையவர்கள் இந்திய அரசு தாழ்த்தப்பட்ட மக்களுக்கு அளித்த 18 சதவிகித இட ஒதுக்கிட்டீன் சலுகையைப் பயன்படுத்தி கல்வி, வேலைவாய்ப்பு, அரசியல் பங்கீடு போன்றவற்றில் சலுகைகளைப் பெற்று முன்னேற்றமடைந்தனர்.
இதனால் 1970க்குப்பின் தாழ்த்தப்பட்ட அருந்ததியர் அல்லாத பிற பிரிவு மக்கள் கல்வி அறிவு பெற்று துப்புரவுப் பணி அல்லாத வேலைவாய்ப்புகளைப் பெற்றுச் சென்று விட்டனர். இந்நிலையில் அறியாமை மற்றும் விழிப்புணர்வின்மை காரணமாக தாழ்த்தப்பட்ட பட்டியலினத்தைச் சேர்ந்த அருந்ததியர்கள் மட்டும் கல்வி அறிவின்மையாலும், பொருளாதாரத்தில் முன்னேற்றமின்மையாலும்  தற்போதும் துப்புரவு சார்ந்த பணிகளான தெருக்கூட்டல், கழிவுநீர், பாதாள சாக்கடை அகற்றுதல், மலம் கலந்த கழிவுநீர்த் தொட்டிகளை சுத்தம் செய்தல், மனித மலங்களை அகற்றுதல், மருத்துவமனைகளில் அனைத்துவிதமான நோயாளிகளுக்கும் சிகிச்சைக்குப் பின் ஏற்படும் மருத்துவக் கழிவுகள், மற்றும் பிணவறைகளில் இறந்த உடல்களை அப்புறப்படுத்துதல், நகர் மற்றும் கிராமப்புறங்களில் உள்ள சுடுகாடுகளில் பிணங்களை எரியூட்டுதல், பின் அப்பகுதியைச் சுத்தப்படுத்துதல், தெருக்களில் இறந்து கிடக்கும் அனாதைப் பிணங்கள் மற்றும் நாய், கழுதை போன்ற மிருகங்களின் இறந்த உடல்களையும் அப்புறப்படுத்தி அடக்கம் செய்தல் போன்ற இழிவுநிலைத் தொழில்களை முழு அளவில் செய்து வருகின்றனர்.
துப்புரவுப் பணியாளர்களின் பணி மற்றும் குடும்பநிலை
1. துப்புரவுப்பணி என்பது அதிகாலையில் சூரிய உதயத்திற்கு முன் துவங்க வேண்டியுள்ளது. அதாவது காலை 5 மணிக்கு முன்பாக தெருக்கூட்டல், அலுவலகங்கள், மருத்துவமனைகள் போன்றவற்றில் இந்தப்பணிகளைத் துவக்க வேண்டியது அவசியமானதாக இருக்கிறது.
2. துப்புரவுப் பணியாளர்களில் பெண் பணியாளர்களுக்கு தெருக்கூட்டுதல், தெருக்களில் இருக்கும் மனித மலங்கள் மற்றும் விலங்கினங்களின் மலங்கள் போன்றவற்றை அகற்றி அவைகளைக் கழிவுக்கூடைகளில் கொண்டு சென்று கழிவுபொருள் அகற்றும் வாகனங்களுக்குக் கொண்டு சென்று கொட்டுதல், ஒவ்வொரு வீடுகளிலும் வைத்திருக்கும் கழிவுகளைப் பெற்று அவற்றையும் கழிவுப்பொருள் கொண்டு செல்லும் வாகனங்களுக்குக் கொண்டு சென்று கொட்டுதல் மற்றும் பொதுக் கழிவுகளை அகற்றுதல் போன்ற பணிகள் இருக்கிறது.
3. ஆண் துப்புரவுப் பணியாளர் என்றால் பெண் துப்புரவுப் பணியாளருக்கான பணிகளுடன் கழிவுகள், குப்பைகளைச் சேகரித்து அதற்கான வாகனங்களில் எடுத்துச் சென்று அரசு ஒதுக்கியுள்ள குப்பைக் கிடங்குகளில் கொட்டி வருவது, கழிவுநீர் தொட்டிகளில் இறங்கிப் பணி செய்வது அதில் ஏற்பட்டுள்ள அடைப்புகளை அகற்றி சுத்தம் செய்வது, சில சமயங்களில் கழிவுநீர்ச் சாக்கடைத் தொட்டிக்குள் இறங்கி வேலை செய்வது போன்ற கடுமையான உயிருக்கு ஆபத்து விளைவிக்கும் நோய்களைத் தோற்றுவிக்கும் பணிகளையும் செய்ய வேண்டியிருக்கிறது.
4. இதே போல் மருத்துவமனைகளில் பல்வேறு விதமான நோயாளிகளுக்குச் சிகிச்சை அளிக்கும் போது வரும் மருத்துவக் கழிவுகளை அகற்றுதல், பிணவறைகளிலுள்ள இறந்த உடல்களை அகற்றுதல், இறந்தவர்களின் உடல்களுக்கு மருத்துவப் பரிசோதனை செய்யப்பட்டிருந்தால் அதனால் வரும் கழிவுகளை அகற்றுதல் என்று மருத்துவப்பணிகளில் இருக்கும் கடைசிப் பணிகளையும் இந்தத் துப்புரவுப் பணியாளர்களே செய்கின்றனர். இதனால் இப்பணியாளர்கள் பல்வேறு கிருமித் தொற்றுதல்களால் உடல்வழியாகவும், மனவழியாகவும் பாதிக்கப்படுகின்றனர். இதனால் ஏற்படும் மனபாதிப்பைக் குறைக்க மதுப்பழக்கத்திற்கு அடிமையாகி விடுகின்றனர்.
5. இவர்கள் மதுப்பழக்கத்திற்கு அடிமையாகி விடுவதால் இவர்கள் வருவாய் முழுவதும் மதுப்பழக்கத்திற்கே செலவழிக்கப்படுகிறது. இதனால் இவர்கள் குடும்பத்திற்கு பொருளாதாரப் பற்றாக்குறை ஏற்பட்டு அதிக வட்டிக்குப் பணம் வாங்கிக் கடனாளியாகவும் ஆகிவிடுகின்றனர். இச்சூழலில் இவர்களது குடும்பத்தின் எதிர்காலம் என்பது கேள்விக்குறிகளாகவே தொடர்கிறது.
6. துப்புரவுப் பணியாளர் குடும்பத்தில் கணவன், மனைவி இருவரும் கல்வியறிவு பெறாமல் துப்புரவு பணிக்குச் செல்வதுடன், அதிகாலையிலேயே அப்பணிக்குச் சென்று விடுவதால் அவர்களின் குழந்தைகளைப் பராமரிக்கவோ, பள்ளிக்கூடங்களுக்கு அனுப்பவோ வேறு ஆட்கள் யாருமில்லாமல் போவதால் அவர்களது படிப்பு கடைசி நிலையிலேயே இருக்கிறது.

7. தந்தை வாங்கும் சம்பளம் முழுவதையும் ஒவ்வாத பணியின் காரணத்தால் மன உளைச்சலில் மதுப்பழக்கத்திற்காகச் செலவிட்டு விடுவதாலும், தாய் வேலை செய்யும் இடங்களில் கிடைக்கும் முந்தைய நாள் உணவுகளைக் குழந்தைகளுக்குக் கொண்டு வந்து கொடுப்பதாலும் அவர்களுக்குச் சரியான உணவு என்பதும் கிடைக்காத நிலையே இருக்கிறது.
8. இதன் தொடர்ச்சியாக இந்த அருந்ததியர் இனத்தில் ஆண்பிள்ளை என்றால் பதினான்கு வயதாகும் போதே கல்வி அறிவு, பொது அறிவு, பகுத்தறிவு போன்றவை இல்லாத காரணத்தால் அப்பையனும் தன் முன்னோர்கள் செய்து வந்த அதே துப்புரவு சார்ந்த பணியையே செய்யவே முற்படுகிறான். துப்புரவுப் பணியாளர்களின் பெண் குழந்தைகளும் இதேபோல் துப்புரவுப் பணியைத்தான் செய்யத் துவங்குகிறாள். மேலும் இவர்கள் சிறுவயதிலேயே திருமணம் செய்து கொண்டு விடுகின்றனர். துப்புரவுப்பணியில் இருப்பவர்களில் பெண்களில் அதிகமானவர்கள் பதினைந்து வயதிலேயே குழந்தைகளைப் பெற்றுத் தாயாகி விடுகின்றாள்.
9. இப்படி துப்புரவுப் பணியாளர்களில் நடைபெறும் சிறுவயதுத் திருமணங்களால் அவர்களுக்கிடையே சரியான புரிந்துணர்வுகள் இருப்பதில்லை. மேலும் ஒவ்வாத பணியும், மதுப்பழக்கமும், தொற்றுநோய்த் தாக்குதலும் துப்புரவுப் பணியாளர்களான ஆண்கள் அதிகமாக 40 வயதிற்குள்ளாகவே மரணமடைந்து போகும் பரிதாப நிலையும் இருக்கிறது. இதனால் துப்புரவுப் பணி செய்யும் பெண்களில் பலரும் இளம்வயதிலேயே விதவைகளாகி வாழ்க்கையை இழந்து தவிக்கின்றனர். மதுரை மாநகராட்சியில் துப்புரவுப்பணி செய்யும் பெண்களில் 94 சதவிகிதப் பெண்கள் பணிக்காலத்தில் கணவனை இழந்து தமிழ்நாடு அரசின் கருணை அடிப்படையிலான பணிக்கு வந்தவர்கள் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.
10. துப்புரவுத் தொழிலாளர்களின் குழந்தைகள் அனைவரும் கல்வி கற்கும் ஆவலில் இருக்கின்றனர். இவர்களுக்கு அவர்களின் வீட்டுச்சூழல், மதுப்பழக்கத்திற்கு அடிமையான தந்தை, கல்வி அறிவில்லாத தாய் என்று குடும்பத்தின் வறுமை நிலை, போதிய குடியிருப்பு வசதியின்மை போன்றவை கல்வியில் பிந்தங்க வைக்கிறது. மேலும் தமிழ்நாடு அரசின் 1 முதல் 8 வகுப்பு வரையிலான கட்டாயத் தேர்ச்சி போன்றவை அவர்கள் பாடங்களை முழுமையாகப் புரிந்து கொள்ளாமல் ஒன்பதாம் வகுப்பில் படிக்க முடியாமல் கடைசி நிலையில் தங்கவைத்து விடுவதும் அதிலிருந்து தாண்டி பத்துக்குச் செல்வது என்பது இன்றும் இயலாத நிலையாகவே இருக்கிறது. இதனால் 10 ஆம் வகுப்பு வரை படித்தவர்களுக்கான அரசு சலுகைகள், கடனுதவிகள் போன்றவைகளைப் பெறமுடியாமல் இருக்கின்றனர். இந்த சலுகைகளை தாழ்த்தப்பட்ட அருந்ததியர் இன சமுதாயத்தினர் தவிர பிற சமுதாயத்தினர்களே தொடர்ந்து பெற்றுக் கொண்டிருக்கின்றனர்.
11. துப்புரவுப்பணியில் இருக்கும் பெண்களிடம், அவர்கள் இயலாமையைப் பயன்படுத்தி பாலியல் பலாத்காரத்திற்கு உட்படுத்திக் கொள்ளும் தவறான செயல்களும் ஒரு சில இடங்களில் நடந்து கொண்டிருக்கின்றன என்பதும் ஒரு வேதனையான தகவல்.

அருந்ததியர் இன மக்கள் அறியாமையும் அரசின் சலுகைகளும்
தாழ்த்தப்பட்ட மக்களுக்கு இந்திய அரசியல் விதிகளின்படி கல்வி, அரசியல், வேலைவாய்ப்பு போன்றவற்றில் 18 சதவித இடஒதுக்கீடு அளிக்கப்பட்டுள்ளது.
1. அரசியல்
* தமிழ்நாட்டில் மொத்தம் 234 சட்டமன்ற உறுப்பினர்கள் இருக்கின்றனர். இதில் 42 பேர் தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்த உறுப்பினர்கள். இவர்களில் பள்ளர், பறையர் எனப்படும் சமுதாயத்தை சேர்ந்தவர்கள் மட்டும் 40 பேர் இருக்கின்றனர். தாழ்த்தப்பட்ட சமுதாயத்தில் மூன்றில் ஒரு பங்கு மக்கள் தொகை கொண்ட அருந்ததியர் இனத்தைச் சேர்ந்தவர்கள் இரண்டு பேர் மட்டுமே இருக்கின்றனர்.
* இது போல் தமிழ்நாட்டில் இருக்கும் மக்களவை உறுப்பினர்கள் 39 பேர். இதில் தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்த உறுப்பினர்கள் 7 பேர். இந்த ஏழு பேரில் தாழ்த்தப்பட்ட அருந்ததியர் இனத்தைச் சேர்ந்தவர் ஒருவர் மட்டுமே.
அரசியலில் அருந்ததியர் இனத்தைச் சேர்ந்தவர்கள் மிகவும் பின்தங்கிப் போயிருப்பதற்கு இந்த சமுதாயத்தினரின் பொருளாதாரத் தாழ்வு நிலை, கல்வியின்மை, அரசியல் விழிப்புணர்வின்மை மற்றும் அரசியல் கட்சிகளின் புறக்கணிப்பும்தான் முக்கியக் காரணிகளாக இருக்கின்றன.
2. கல்வி
* அரசு தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்த மக்களுக்கு இலவசக் கல்வி மற்றும் இலவச விடுதி வசதி, உதவித்தொகை போன்றவைகளை வழங்குகின்றன. இந்த சலுகைகளை அருந்ததியர் இன மக்கள் பய்னபடுத்துவது அரிதாகவே இருக்கின்றது. ஏனென்றால் இந்த இனத்தில் பத்தாவது வகுப்புக்கு மேல் படிக்கும் மாணவர்கள் மிகக் குறைவு. இந்த சமுதாய மக்கள் மற்ற தாழ்த்தப்பட்ட சமுதாய மக்களாலும் ஒதுக்கப்பட்டவர்களாகவே கருதப்படுகின்றனர். இந்த அருந்ததியர் இன சமுதாயத்தினர் அரசின் கல்விச் சலுகைகளைப் பெற்று உயர்கல்வி படிப்பது என்பதே குறைவாகத்தான் இருக்கிறது.
* தாழ்த்தப்பட்ட மாணவர்களுக்கு அரசு வழங்கும் சலுகைகளில் துப்புரவுப் பணியாளர் மற்றும் தோல் தொழில் செய்யும் தொழிலாளர்களுக்கு கூடுதல் சலுகைகள் அளிக்கப்படுகிறது. இருப்பினும் இதுகுறித்த அறியாமையால் அருந்ததியர் இன மக்கள் இந்த சலுகைகளை அதிக அளவில் பெற்றுப் பயனடைய முடியாமலேயே இருந்து வருகின்றனர்.
3. அரசு உதவிகள்
* தாழ்த்தப்பட்ட மக்களுக்கு ஆதிதிராவிட நலத்துறை மூலம் தாட்கோ வழியாக பல்வேறு தொழில்களுக்கான கடன்கள் மற்றும் பயிற்சிகள் அளிக்கப்படுகின்றது. இந்தச் சலுகைகளையும், பயிற்சிகளையும் வசதியுடைய தாழ்த்தப்பட்ட சமுதாயத்தினர்களே பெற்றுப் பயனடையும் நிலை இருக்கிறது. இதில் பயனடந்த அருந்ததியர் சமுதாயத்தினர் இரண்டு சதவிகிதம் மட்டுமே என்பது வேதனைக்குரிய ஒன்று.
அருந்ததியர் இன அமைப்புகள்
* கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக தாழ்த்தப்பட்ட இனத்திலும் ஓர் ஒடுக்கப்பட்ட இனமான அருந்ததியர் என்று அழைக்கப்படும் சக்கிலிய இன மக்களிடம் செயல்படும் அருந்ததியர் இன அமைப்புகள் எல்லாம் சிறிது காலத்தில் காணாமல் போய்விடுகிறது.
* பிற இனத்தவர்களின் பிரித்தாளும் சூழ்ச்சிக்கு எளிதில் பலியாகிவிடும் இவர்கள் ஒற்றுமைப்பட்டு நிற்பது என்பது இன்றுவரை கேள்விக்குரியதாகவே இருக்கிறது.
* அருந்ததியர் இன மக்களிடம் அவர்கள் தற்போது வாழ்ந்து வரும் பகுதிகள் குறித்த பாகுபாடு இருந்து வருவதால் தமிழகம் முழுவதும் இவர்களை ஒன்றிணைப்பதில் கருத்து வேறுபாடுகளும், அமைப்பு வழியில் ஒற்றுமையின்மையும் தொடர்ந்து இருந்து கொண்டிருக்கின்றன.
* அருந்ததியர் இனத்தில் பல தலைவர்களும் பல அமைப்புகளும் செயல்படுவதால் குறிப்பிட்ட கொள்கைகள், நோக்கங்கள் எதையும் அடைய முடியாமல் பின்னடைவுகள்தான் ஏற்பட்டுக் கொண்டிருக்கின்றன.
* அருந்ததியர் இன மக்கள் முன்னேற்ற அமைப்புகள் எனும் பெயர்களில் சில தொண்டு நிறுவனங்கள் துவங்கப்பட்டு அருந்ததியர் இன மக்கள் முன்னேற்றத்திற்காக அரசு ஒதுக்கும் பணத்தைச் சுரண்டிக் கொண்டிருக்கின்றன.
* சில வெளிநாட்டு அமைப்புகள் துப்புரவுப்பணியில் இருப்பவர்களுக்காக சில உதவிகளை வழங்கி வருகின்றன. இந்த உதவித்தொகையை அருந்ததியர் இனத்தின் ஒரு சில அமைப்புகள் பெற்றுக் கொள்கின்றன. ஆனால் இந்த அமைப்புகளில் இருக்கும் குறிப்பிட்ட சிலர் மட்டும் பயன்படுத்திக் கொண்டு அருந்ததியர் இன முன்னேற்றத்திற்குப் பயன்படுத்தியது போல்  காண்பித்துக் கொள்ளும் தவறான போக்கும் இருக்கிறது.

இப்படி கல்வி, சமூகம், அரசியல் மற்றும் பொருளாதாரம் போன்ற அனைத்து வழிகளிலும் தாழ்த்தப்பட்ட சமுதாயத்திலும் தனிமைப்படுத்தப்பட்ட சமுதாயமாக இருந்து வரும் அருந்ததியர் இன சமுதாயத்திற்கு தமிழ்நாடு அரசு தாழ்த்தப்பட்ட சமுதாயத்தினருக்கான இட ஒதுக்கீட்டில் உள் ஒதுக்கீடு செய்ய வழிவகை செய்துள்ளது. இந்த உள் ஒதுக்கீட்டில் அருந்ததியர் இன மக்கள் முன்னேற்றமடைந்து மற்ற சமுதாயத்தினரைப் போல் வருவதற்கு அவர்களுக்கான அடிப்படைக் கல்வியும், பொருளாதார நிலையும் முதலில் ஏற்றமடைந்தால் மட்டுமே அரசின் எண்ணம் ஈடேறும். முதலில் அருந்ததியர் இன மக்களின் மீது தனிப்பட்ட கவனம் கொள்ளும் கல்விக்கூடங்கள் அமைக்க அரசு முன்வரவேண்டும்
.